புதிய ஹோண்டா அக்கார்டு தாய்லாந்தில் அறிமுகம்... விரைவில் இந்தியாவில்

By Ravichandran

புதிய ஹோண்டா அக்கார்டு கார் தாய்லாந்தில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இந்த புதிய மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடிவமைப்பு, வசதிகள், தொழில்நுட்பம் என அனைத்திலும் முன்னேற்றம் கண்டிருக்கும் புதிய ஹோண்டா அக்கார்டு கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புக்கிங் துவக்கம்;

புக்கிங் துவக்கம்;

தாய்லாந்தில் அறிமுகம் செய்யபட்டுள்ள புதிய ஹோண்டா அக்கார்டு காருக்கு வரும் 25-ஆம் தேதி முதல் புக்கிங் துவங்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த புதிய ஹோண்டா அக்கார்டு கார், இந்தியாவிலும் விரைவில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப விவரங்கள்;

தொழில்நுட்ப விவரங்கள்;

ஹோண்டா நிறுவனத்தின் தாய்லாந்துப் பிரிவு, இந்த புதிய ஹோண்டா அக்கார்டு கார் தாய்லாந்தில் அறிமுகம் செய்யபட்டது குறித்து சமூக வளைதளங்களில் தகவல்களை வெளியிட்டது.

ஆனால், இதன் தொழில்நுட்ப விவரங்கள் குறித்து எந்த விதமான தகவல்களையும் வெளியிடவில்லை. இது, வட அமெரிக்காவிலும், இந்தியாவிலும் விற்கபடும் மாடல்களை போன்றே தான் இருக்கும் என தெரிகிறது.

கிடைக்கும் இஞ்ஜின் தேர்வுகள்;

கிடைக்கும் இஞ்ஜின் தேர்வுகள்;

புதிய ஹோண்டா அக்கார்டு2016, 2 பெட்ரோல் இஞ்ஜின் இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கும்.

பெட்ரோல் இஞ்ஜின்-1;

பெட்ரோல் இஞ்ஜின்-1;

புதிய ஹோண்டா அக்கார்டு மாடல், 2.0 லிட்டர், ஐ-விடெக், 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 153 பிஹெச்பியையும், 190 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

பெட்ரோல் இஞ்ஜின்-2;

பெட்ரோல் இஞ்ஜின்-2;

புதிய ஹோண்டா அக்கார்டு மாடல், 2.4 லிட்டர், ஐ-விடெக், 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜினையும் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 172 பிஹெச்பியையும், 225 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்திவிற்கான மாடலின் விவரங்கள்;

இந்திவிற்கான மாடலின் விவரங்கள்;

இந்தியாவிற்கான ஹோண்டா அக்கார்டு மாடல், ஹைப்ரிட் வேரியண்ட்டாக இருக்கும்.

இந்த ஹோண்டா அக்கார்ட், 2.0 லிட்டர், ஐ-விடெக், 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் கொண்டிருக்கும். ஒரு எலக்ட்ரிக் மோட்டாரும் இணைக்கபட்டிருக்கும் இதன் இஞ்ஜின் 141 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஹோண்டா அக்கார்டு காரின் இந்த ஹைப்ரிட் வேரியண்ட், ஒட்டுமொத்தமாக 196 பிஹெச்பியையும், 306 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

பொலிவு கூட்டபட்ட புதிய ஹோண்டா அக்கார்டு2016, செதுக்கபட்டது போன்ற வெளிப்புற அமைப்பு கொண்டுள்ளது.

இதன் எக்ஸ்டீரியர், புதிய அலுமினியம் பானட், எல்ஈடி ஹெட்லேம்ப்கள், எல்ஈடி பனி விளக்குகல் மற்றும் எல்ஈடி டெய்ல்லைட்கள் கொண்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

பொலிவு கூட்டபட்ட புதிய ஹோண்டா அக்கார்டு2016-ன் உட்புற அமைப்பு, ஆப்பிள் கார்-பிளே உடைய 7-இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ ஸ்மார்ட்ஃபோன் இண்டெக்ரேஷன் வசதிகள் கொண்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மீண்டும் இந்தியா வரும் ஹோண்டா அக்கார்டு... எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா?

இந்தியாவில் புதிய ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட் மாடல் அறிமுகம்

ஹோண்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Wednesday, February 17, 2016, 12:44 [IST]
English summary
The New Honda Accord was launched in Thailand and is expected to be launched in India soon. Bookings for New Honda Accord 2016 begins from February 25 in Thailand. Not much technical details were revealed regarding the model launched in Thailand. As far as India is concerned, India would get hybrid variant, which has got many new updates.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+