ஹோண்டா பிஆர்வியின் முதல் மாத விற்பனை தகவல்கள் வெளியாகியது

By Ravichandran

ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவியின் முதல் மாத விற்பனை எதரிபார்த்த அளவிற்கு இல்லை என தெரிய வந்துள்ளது.

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவியை மே மாதத்தின் போது அறிமுகம் செய்தனர். தற்போது, ஒரு மாதம் ஆகிய நிலையில், இதன் விற்பனை விவரங்கள் வெளியாகியுள்ளது.

honda-br-v-compact-suv-india-may-2016-sales-report-out

அறிமுகம் செய்யபட்ட முதல் மாதத்தில், ஹோண்டா நிறுவனம் 2,344 பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவிகளை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது.

ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவி, 8.7 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விர்கபட்டு வருகிறது. ஆச்சர்யமூட்டும் செய்தி என்னவெனில், பிஆர்வி மாடலை காட்டிலும், மொபிலியோவின் முதல் மாத விற்பனை அதிகமாகவே இருந்தது.

தற்போதைய நிலையில், ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவி, நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும், இது வரை சுமார், பிஆர்வி மாடலுக்கு சுமார் 9,000 ஆர்டர்கள் குவிந்துள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கிறது.

honda-br-v-compact-suv-india-may-2016-sales-report-released-now

ஒட்டுமொத்தத்தில், இந்திய சந்தைகளில் ஹோண்டா நிறுவனம், 2016 மே மாதத்தில் 9,954 காரகைளையே விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு, 651 கார்கள் ஏற்றுமதி செய்யபட்டுள்ளது. இதில் ஹோண்டா சிட்டி செடான் கார் தான் மிக அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளது. வெறும் 69 சிஆர்-வி
கார்கள் மட்டுமே விற்பனை ஆனது. ஆனால், கடந்த ஆண்டு 2015 மே மாதத்தின் போது, ஹோண்டா நிறுவனம் 13,431 கார்கள் என்ற அபார விற்பனையை பாத்து செய்தது.

ஹோண்டா நிறுவனம் வழங்கும் ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவி, இந்திய சந்தைகளில் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. 2016 மே மாதத்தின் போது, ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா, ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா டியூவி3OO ஆகிய மாடல்கள் அபாரமான விற்பனையை பதிவு செய்துள்ளன.

honda-br-v-compact-suv-india-may-2016-sales-report-released-recently

More from DriveSpark

Article Published On: Friday, June 3, 2016, 7:12 [IST]
English summary
Honda BR-V compact SUV First Month Indian Sales has not been as expected. Honda Cars India launched their Honda BR-V compact SUV during May 2016. In first month, Honda dealers managed to sell only 2,344 units of BR-V. Surprisingly, Mobilio managed better first-month sales compared to BR-V. But, Honda India confirms that, it received 9,000 BR-V orders...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+