ஹோண்டா பிஆர்-வி பற்றிய 5 முக்கியமான விஷயங்கள் - முழு விவரங்கள்

By Ravichandran

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி இந்த மே மாதம் 5-ஆம் தேதி அறிமுகம் செய்யபடுகிறது. ஏராளமான வாடிக்கையாளர்கள் இதை வாங்குவது குறித்த திட்டங்களை கொண்டிருக்கலாம்.

ஹோண்டா பிஆர்-வி வகைபடுத்தபட்டுள்ள செக்மண்ட்டில் ஏராளமான தேர்வுகள் உள்ளன. அப்படி இருந்தாலும் வாடிக்கையாள்ர்கள் இதை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் 5 முக்கிய அம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

7 - ஸீட்டர்;

7 - ஸீட்டர்;

ஹோண்டா நிறுவனம், காம்பேக்ட் எஸ்யூவி செக்மண்ட்டில் தங்களுக்கு என தனி இடத்தை உருவாக்கி கொள்ள முனைப்புடன் உள்ளது. இதனால், இந்த பிஆர்-வி மாடலுக்கு 7-ஸீட்டர் இருக்கை அமைப்பு வழங்கியுள்ளனர்.

ஹோண்டா நிறுவனம், இந்த பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவிக்கு நீண்ட சரிவான ரியர் டிசைன் வழங்கி வடிவமைத்துள்ளனர். இதனால் இதன் 3-வது வரிசையில் 2 பேர் உட்பட 7 பயணியர்கள் இந்த பிஆர்-வி காரில் சவுகரியமாக செல்ல முடியும்.

ஹோண்டா பிஆர்-வி பற்றிய 5 முக்கியமான விஷயங்கள் - முழு விவரங்கள்

ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா முக்கிய போட்டி மாடல்களாக விளங்கும் பட்சத்தில், ஹோண்டா நிறுவனம் இந்த பிஆர்-வி காருக்கு சிறந்த அம்சங்களை வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

எம்பிவி மற்றும் எஸ்யூவி;

எம்பிவி மற்றும் எஸ்யூவி;

ஹோண்டா பிஆர்-வி, ஹோண்டா சிஆர்-வி பிளாட்ஃபார்மில் வடிவமைக்கபட்டுள்ளதாக அனைவரும் தவறாக நினைத்து கொள்ளலாம். ஆனால், இது மொபிலியோ, பிரியோ மற்றும் அமேஸ் அகியவை உருவாக்கபட்ட பிளாட்ஃபார்மில் வடிவமைக்கபட்டுள்ளது.

இதை, ஹோண்டா நிறுவனம் இப்படி வடிவமைப்பதற்கான முக்கிய காரணமே, இதில் 7 பேர் சவுகரியமாக பயணிக்கும் படி இருக்க வேண்டும் என்பதற்காக தான் என கூறப்படுகிறது.

ஹோண்டா பிஆர்-வி பற்றிய 5 முக்கியமான விஷயங்கள் - முழு விவரங்கள்

இப்படிபட்ட வடிவமைப்பினால், ஹோண்டா பிஆர்-வி சற்று நீண்ட் வீல் பேஸ் கொண்ட மாடலாக உள்ளது. ஹோண்டா பிஆர்-வி, நமக்கு மொபிலியோவை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. இதனால், எஸ்யூவியாக உள்ள இந்த மாடலை நாம் எம்பிவி என தவறாக எடுத்து கொள்ளலாம்.

எனினும், இதன் உயர்ந்த தோற்றம், கட்டுமஸ்தான தோற்றம், இது எஸ்யூவி என ஏற்று கொள்ள வைத்து கொள்ள வைக்கிறது. இது ஹோண்டா நிறுவனம் மூலம் மேற்கொள்ளபட்ட சிறப்பான செயல் ஆகும்.

செயல்திறன்;

செயல்திறன்;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், மொபிலியா காணப்படுவது போன்ற இஞ்ஜினையே இந்த பிஆர்-வி காருக்கும் வழங்கியுள்ளனர்.

இதன் பெட்ரோல் வேரியண்ட் மற்றும் டீசல் வேரியண்ட் ஆகிய இரண்டிலுமே 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது. இந்த இஞ்ஜின் பெட்ரோல் வேரியண்ட்டில் 118 பிஹெச்பியையும், டீசல் வேரியண்ட்டில் 99 பிஹெச்பியையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஹோண்டா பிஆர்-வி பற்றிய 5 முக்கியமான விஷயங்கள் - முழு விவரங்கள்

ஹோண்டா பிஆர்-வி, மொபிலியோவிற்கு மேலாக வகைபடுத்தபட்டுள்ளது. ஹோண்டா பிஆர்-வி கொண்டுள்ள எஸ்யூவி தோற்றத்திற்கு ஏற்ற திறனை வெளிபடுத்தும் வகையில், இதன் இஞ்ஜின் ரி-ட்யூன் செய்யபடும்.

ஹோண்டா பிஆர்-வியின் இஞ்ஜின் மேனுவல் மற்றும் சிவிடி அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும். ஆனால் பெட்ரோல் வேரியண்ட்டின் இஞ்ஜின், சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும்.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, ஆசியான் என்கேப் கிராஷ் டெஸ்ட் எனப்படும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபட்டது.

இதில், இஎஸ்சி எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் கொண்ட வேரியண்ட், பிரமாதமான 5-ஸ்டார் மதிப்பீடு பெற்றது.

இஎஸ்சி இல்லாத வேரியண்ட், சிறப்பான 4-ஸ்டார் மதிப்பீடு பெற்றது.

ஹோண்டா பிஆர்-வி பற்றிய 5 முக்கியமான விஷயங்கள் - முழு விவரங்கள்

இந்த அபாரமான ரேட்டிங் மதிப்பீடுகளை தவிர்த்து, ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, ஏராளமான பாதுக்காப்பு வசதிகள் கொண்டுள்ளது. இதில் ஏர்பேக்குகள், இபிடி உடனான ஏபிஎஸ் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் பொருத்தபட்டுள்ளது.

மேலும், பிற போட்டி நிறுவனங்களின் மாடல்களிடம் இருந்து எழும் போட்டியை சமாளிக்க, மேலும் ஆச்சர்யமூட்டும் வசதிகளையும் கொண்டிருக்கலாம்.

போட்டி, விலை;

போட்டி, விலை;

பிஆர்-வி தான் ஹோண்டா நிறுவனம் சார்பாக இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபடும் முதல் காம்பேக்ட் எஸ்யூவி ஆகும். இதனால், இதை இந்தியாவில் சரியான விலையில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதில் ஹோண்டா நிறுவனம் அதிக கவனம் கொண்டிருக்கும்.

வேரியண்ட்களை பொருத்து ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் விலைகள், 10 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் என்ற ரேஞ்ச்சில் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்தோனேஷிய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபட்ட ஹோண்டா பிஆர்-வியின் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்பில் 11.5 லட்சம் ரூபாயாக இருந்தது.

ஹோண்டா பிஆர்-வி பற்றிய 5 முக்கியமான விஷயங்கள் - முழு விவரங்கள்

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும். ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மாபெரும் வெற்றி மாடல் ஆகும்.

எனினும், ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி இந்திய வாகன சந்தைகளில் எப்படிபட்ட வரவேற்ப்பை பெரும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் இந்திய அறிமுகத்திற்கு முன்பாக டீஸர் வெளியீடு

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, இந்தியாவில் மே 5-ல் அறிமுகம்?

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங் துவங்கியது

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Sunday, April 24, 2016, 7:03 [IST]
English summary
Japan based Car maker Honda is launching their Honda BR-V Compact SUV on May 5, 2016. Honda BR-V will be positioned above the Mobilio. Do you know five important facts like it being a 7-Seater and its Safety Ratings and more about all-new Honda BR-V? To know more about 5 most important facts of Honda BR-V Compact SUV, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+