ஹோண்டா நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கபட்ட 57,676 கார்கள் இந்தியாவில் ரீகால்

By Ravichandran

ஹோண்டா கார்கள் இந்தியா லிமிடெட் அல்லது ஹெச்சிஐஎல் என அழைக்கபடும் ஹோண்டா கார் நிறுவனம், தாங்களாக முன்வந்து டிரைவர்-சைட் ஏர் பேக் இன்ஃப்ளேட்டர்களை மாற்றி தர உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் சார்பாக தயாரிக்கபட்ட முந்தைய தலைமுறையை சேர்ந்த சிட்டி, ஜாஸ் மற்றும் சிவிக் ஆகிய மாடல்களை சேர்ந்த 57,676 கார்களின் டிரைவர்-சைட் ஏர் பேக் இன்ஃப்ளேட்டர்கள் மாற்றி தரப்பட உள்ளது.

இந்த நடவடிக்கையானது, ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்கள் தொடர்பாக ஹோண்டா நிறுவனம் மேற்கொள்ளும் ஹோண்டா பிரிவெண்டிவ் குளோபல் ரீகால் கேம்பெய்ன் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.

ரீகால் செய்து, டிரைவர்-சைட் ஏர் பேக் இன்ஃப்ளேட்டர்களை மாற்றி தரும் ஹோண்டாவின் இந்த நடவடிக்கை இலவசமாக மேற்கொள்ளபட உள்ளது. இந்த நடவடிக்கை படிபடியாக மேற்கொள்ளபட உள்ளது.

ஹோண்டா நிறுவன டீலர்ஷிப்களில் மூலம், டிரைவர்-சைட் ஏர் பேக் இன்ஃப்ளேட்டர்களை மாற்றி தரும் நடவடிக்கை ஃபிப்ரவரி 20-ஆம் தேதி முதல் மேற்கொள்ளபடுகிறது. இது தொடர்பாக, ஹோண்டா நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக தகவல் பரிமாற்றம் செய்கிறது.

தங்களின் கார்கள், இந்த பாதிக்கபட்ட கார்களின் பட்டியலில் உள்ளதா என்பதையும், இந்த ரீகால் நடவடிக்கையில் தங்களின் டிரைவர்-சைட் ஏர் பேக் இன்ஃப்ளேட்டர்கள் மாற்றி தரப்பட வேண்டியவையா என்பதையும் வாடிக்கையாளர்கள் தாங்களே தெரிந்து கொள்ளலாம்.

honda-cars-recall-and-replace-driver-side-air-bag-inflators-in-india

இதற்கு www.hondacarindia.com என்ற இணையதளத்தில் சென்று அதற்குள் உள்ள ஸ்பெஷலான மைக்ரோ சைட்டில் பிரவேசித்து 17 கேரக்டர்கள் அடங்கிய ஆல்ஃபா-நியூமரிக் வெஹிக்கிள் ஐடெண்டிஃபிகேஷன் நம்பர் (விஐஎன் என்ற எண்ணை) சமர்பிக்க வேண்டும். அப்படி செய்யும் நிலையில், தங்கள் கார்கள் இந்த பட்டியலில் உள்ளதா, இல்லையா என வாடிக்கையாளர்கள் தாங்களே தெரிந்து கொள்ளலாம்.

எந்த எந்த மாடல்களில், எத்தனை கார்கள் பாதிக்கபட்டுள்ளது என்பதற்கான தெளிவான விவரங்களை தெரிந்து கொள்வோம்.

மாடல் - சிட்டி
உற்பத்தி செய்யபட்ட காலம் - ஜனவரி 2012 - ஜூன் 2013
பாதிக்கபட்ட கார்களின் எண்ணிக்கை - 49,572

மாடல் - ஜாஸ்
உற்பத்தி செய்யபட்ட காலம் - ஃபிப்ரவரி 2012 - ஃபிப்ரவரி 2013
பாதிக்கபட்ட கார்களின் எண்ணிக்கை - 7,504

மாடல் - சிவிக்
உற்பத்தி செய்யபட்ட காலம் - ஜனவரி 2012 - ஆகஸ்ட் 2012
பாதிக்கபட்ட கார்களின் எண்ணிக்கை - 600

More from DriveSpark

Article Published On: Saturday, February 20, 2016, 8:30 [IST]
English summary
Honda Cars India Ltd (HCIL) announced that, it is voluntarily willing to replace Driver Side Airbag inflators in India. This recall activity is being carried out as part of the Honda’s preventive global recall campaign, concerning with Air Bag inflators. Totally, 57,676 vehicles of previous generation of City, Jazz and Civic are to be recalled for this activity.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+