ஃப்யூவல் செல் அடிப்படையிலான ஹோண்டாவின் கிளாரிட்டி என்ற புதிய 5-ஸீட்டர் செடான் அறிமுகம்
ஹோண்டா நிறுவனம், கிளாரிட்டி என்ற புதிய 5-ஸீட்டர் ஃப்யூவல் செல் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
கிளாரிட்டி என பெயர் சூட்டபட்டுள்ள புதிய 5-ஸீட்டர் ஃப்யூவல் செல் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

கிளாரிட்டி பற்றி...
ஃப்யூவல் செல் தொழில்நுட்பம் என்பது மிக அதி நவீன தொழில்நுட்பங்களில் ஒன்றாக உள்ளது.
தங்கள் நிறுவனம் சார்பாக, கிளாரிட்டி என்று அழைக்கபடும் காரை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த கிளாரிட்டி, இதன் வகையில் முதல் 5-ஸீட்டர் வாகனமாகும்.

விற்பனை இலக்கு;
ஹோண்டா நிறுவனம், முதல் வருடத்தில் ஃப்யூவல் செல் தொழில்நுட்பத்தில் உருவாக்கபட்டுள்ள கிளாரிட்டி மாடலில், 200 வாகனங்களை விற்றால் போதும் என்ற இலக்கு கொண்டுள்ளது.

குத்தகைக்கு வழங்க திட்டம்;
கிளாரிட்டியை, சுற்றுசூழல் அமைச்சகங்கள் மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் குத்தகைக்கு வழங்க ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஜப்பானில், இந்த கிளாரிட்டி வாகனத்தை ஒரு மாதத்திற்கு குத்தகைக்கு எடுக்க 1,00,000 யென் (58961 ரூபாய்) செலவாகும்.

அறிமுகம்;
ஹோண்டா கிளாரிட்டி, அமெரிக்க வாகன சந்தைகளில் இந்த ஆண்டின் பிற்பாதியில் அறிமுகம் செய்யபடலாம்.

ஃப்யூவல் செல் தொழில்நுட்பம் பற்றி...
கிளாரிட்டி காருக்கு ஹோண்டா உபயோகிக்கும் இந்த ஃப்யூவல் செல் தொழில்நுட்பம் மிகவும் சுத்தமானதாகும்.
கிளாரிட்டி, ஹைட்ரஜனை ஃப்யூவலாகவும் (எரிபொருள்), காற்றில் உள்ள ஆக்ஸிஹனையும் அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. ஆகவே, ஹைட்ரஜன் மற்றும்
ஆக்ஸிஜன் ஒன்று சேரும் போது வெளியாகும் தண்ணீர் மட்டுமே கழிவாக வெளியாகிறது.
தண்ணீர் மட்டுமே கழிவாக வெளியிடப்படுவதால், கிளாரிட்டி மாசுவெளிப்பாடே இல்லாத (பூஜ்ஜியம் மாசுவெளிப்பாடு வெளியிடும்) இல்லாத காராக விளங்குகிறது.

மைலேஜ்;
ஒரு முறை ஹைட்ரஜனை, கிளாரிட்டியின் எரிபொருள் டேங்க்கின் முழு கொள்ளளவுக்கு நிரப்பிவிட்டால், சுமார் 750 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
கிளாரிட்டி போன்ற செடானுக்கு, மிகவும் எரிபொருள் திறன்மிக்கதாக கருதப்படுகிறது.

5-ஸீட்டர்;
ஹோண்டா கிளாரிட்டி, மேம்படுத்தபட்ட, கூடுதல் திறன்மிக்க மற்றும் சிறிய அளவிலான ஃப்யூவல் செல் கொண்டுள்ளது.
இதனால் இந்த ஹோண்டா கிளாரிட்டியில், 5 பயணியர்கள் சவுகரியமாக பயணிக்க முடியும்.

இதர தொடர்புடைய செய்திகள்;
டாடா - இஸ்ரோ கூட்டணியில் உருவான இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பஸ்
துளியும் மாசு ஏற்படுத்தாத ஃப்யூவல் செல் ரயில்: 2018ல் அறிமுகமாகிறது
ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் எஸ்யூவி-களை உருவாக்குவதில் ஹூண்டாய் முனைப்பு

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








