சக்கைப் போடு போடும் ஹோண்டா பிஆர்-வி... ஒன்றரை மாதத்தில் 10,000 புக்கிங்ஸ்...
மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகமாகி அனைத்து தரப்பினரையும் வசீகரித்துள்ள கார் ஹோண்டா பிஆர்-வி. காம்பேக்ட் எஸ்யூவி ரக மாடலான பிஆர்-வியின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அந்த நிறுவனத்தை மகிழ்ச்சியில் திக்கு முக்காடச் செய்துள்ளது.
செடான் கிளாஸ் கார்களுக்கு பெயர் போன ஹோண்டா நிறுவனம், 7 இருக்கைகள் கொண்ட சிறிய ரக எஸ்யூவி காரை பிஆர்-வி என்ற பெயரில் கடந்த மாதம் 5-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

வந்த சில தினங்களிலேயே இந்த கார் செம பிக்-அப் ஆனதுதான் ஆச்சரியமான விஷயம். ஒன்றரை மாதத்துக்குள் 10,000 பேர் பிஆர்-வி காரை வாங்க புக்கிங் செய்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்படி என்ன இருக்கிறது இந்த காரில்? அதையும் பார்க்கலாம்...
இந்த மாடலில் வாடிக்கையாளர்களின் கவனத்தை முதலில் கவர்வது டிசைன். நேர்த்தியான வடிவமைப்பு, ஜெண்டிலான லுக் என முதல் பார்வையிலேயே நம்மை விழ வைத்து விடுவது பிஆர்-வியின் சிறப்பு.
சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களைக் கொண்ட மாடல்கள் உள்ளன. பெட்ரோல் எஞ்சின் 117 பிஎச்பி (முறுக்கு விசை) மற்றும் 145 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டீசல் எஞ்சினில் 99 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் வெளியாகும் திறன் உள்ளது.
பெட்ரோல் மாடலில் ஆட்டோமேடிக் கியர் வசதி இருப்பது பிஆர்-வியின் கூடுதல் சிறப்பு. மைலேஜ் பெட்ரோல் எஞ்சினில் 16 கிலோ மீட்டரும், டீசல் எஞ்சினில் 21.9 கிலோ மீட்டரும் கிடைக்கும் என ஹோண்டா நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
இதைத்தவிர முதல் மூன்று ஆண்டுகளுக்கு எத்தனை கிலோ மீட்டர் வேண்டுமானாலும் பயணிக்கலாம். அதற்கான சர்வீஸ் வாரண்டியை நாங்கள் தருகிறோம் என ஹோண்டா அளித்த உறுதியால், பிஆர்-வி மாடல் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை உயர்ந்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் யோய்சிரோ யூனோ கூறுகையில், பிஆர்-வி காரில் பெட்ரோல், டீசல் ஆகிய இரு மாடல்களுக்குமே நல்ல வரவேற்பு உள்ளது. அறிமுகமான சில நாள்களிலேயே 10,000 பேர் முன்பதிவு செய்திருப்பது சந்தோஷமான விஷயம் என்றார்.
எஸ்யூவி கார் மார்க்கெட்டில், புதிய சகாப்தத்தை படைக்கப் போகிறதா ஹோண்டா பிஆர்-வி என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications








