ஹோண்டா ஹெச்ஆர்-வி சியூவி இந்தியாவில் விரைவில் அறிமுகம்?

Written By:

ஹோண்டா நிறுவனம், தங்களின் ஹோண்டா ஹெச்ஆர்-வி சியூவி (கிராஸ்ஓவர் யூட்டிலிட்டி வெஹிகிள்) காரை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து திட்டமிட்டு வருகிறது.

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம் வழங்கும் ஹோண்டா ஹெச்ஆர்-வி கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

கிராஸ்ஓவர் செக்மேனட்டில் ஹோண்டா;

கிராஸ்ஓவர் செக்மேனட்டில் ஹோண்டா;

ஹோண்டா இந்தியா நிறுவனம், சமீபத்தில் தான் ஹோண்டா பிஆர்-வி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதையடுத்து, தற்போது கிராஸ்ஓவர் செக்மென்ட்டில் தடம் பதிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.

இந்தியாவில் ஹெச்ஆர்-வி;

இந்தியாவில் ஹெச்ஆர்-வி;

இந்தியாவில் ஹோண்டா ஹெச்ஆர்-வி கொண்டு வருவது பற்றி, ஹோண்டா இந்தியா சிஇஓ யொய்ச்சிரோ யூனோ, AutoCarPro என்ற நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

இதன் படி, ஹோண்டா நிறுவனம், இந்தியாவின் கிராஸ்ஓவர் செக்மென்ட்டை ஆராய்ந்து வருகிறது என்றும், அதில் வாய்ப்புகள் இருப்பதாக தெரிந்தால் ஹோண்டா ஹெச்ஆர்-வி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

போட்டி;

போட்டி;

சர்வதேச அளவில், ஹோண்டா ஹெச்ஆர்-வி, ஜீப் ரெனிகேட், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களுடன் கடுமையாக போட்டி போட்டு வருகிறது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகளை பொருத்த வரை, ஹோண்டா ஹெச்ஆர்-வி, பெட்ரோல் இஞ்ஜின், டீசல் இஞ்ஜின் மற்றும் ஹைப்ரிட் இஞ்ஜின் ஆகிய 3 விதமான இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

இந்தியாவிற்கான இஞ்ஜின் தேர்வுகள்;

இந்தியாவிற்கான இஞ்ஜின் தேர்வுகள்;

இந்திய சந்தைகளை பொருத்த வரை, ஹோண்டா ஹெச்ஆர்-வி, 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் i-DTEC இஞ்ஜினுடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

விரைவில் வெளியாக உள்ள, ஹோண்டா சிஆர்-வி மாடலிளும் இதே இஞ்ஜின் கான்ஃபிகரேஷன் தான் உபயோகிக்கப்பட உள்ளது.

வகைப்படுத்தல்;

வகைப்படுத்தல்;

இந்தியாவில் ஹோண்டா ஹெச்ஆர்-வி அறிமுகம் செய்யப்பட்டால், அது ஹோண்டா பிஆர்-வி மாடளுக்கும் மேலாக வகைப்படுத்தப்படும்.

இந்தியாவில் போட்டி;

இந்தியாவில் போட்டி;

இந்திய வாகன சந்தைகளில், ஹோண்டா ஹெச்ஆர்-வி, மஹிந்திரா XUV 500 மாடலுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

ஹோண்டா ஹெச்ஆர்-வி, மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய 2 தேர்வுகளுடன் வெளியாகலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை;

எதிர்பார்க்கப்படும் விலை;

ஹோண்டா ஹெச்ஆர்-வி, 15 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

ஹோண்டா இந்தியா, இந்த ஹோண்டா ஹெச்ஆர்-வி சியூவி (கிராஸ்ஓவர் யூட்டிலிட்டி வெஹிகிள்) மாடலை இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்தால், இந்த செக்மென்ட்டில் இது தான் சிறந்த தேர்வாக இருக்கும் என உங்களின் டிரைவ்ஸ்பார்க் தளம் நினைக்கிறது.

உங்களது கருத்துகளை நீங்களும், கமென்ட்ஸ் பகுதியல் பதிவு செய்யலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹோண்டா தொடர்புடைய செய்திகள்

ஹோண்டா சிஆர்வி தொடர்புடைய செய்திகள்

ஹோண்டா பிஆர்வி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Honda Car India might be launching their Honda HR-V Crossover Utility Vehicle (CUV) in India soon. Speaking to AutoCarPro, Yoichiro Ueno, Honda India's CEO, said that they are analysing the market, and if there is potential in crossover segment, HR-V will be launched in India. Concerning engine configurations, HR-V is offered in petrol, hybrid, and diesel options. For more details, check here...
Story first published: Friday, June 10, 2016, 16:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark