ஹோண்டா மொபிலியோ எம்பிவியின் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தம்

By Ravichandran

ஹோண்டா நிறுவனம், இந்தியாவில் நடைபெறும் தங்களின் மொபிலியோ எம்பிவியின் உற்பத்தியை நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளனர்.

சமீப காலமாக, ஹோண்டா மொபிலியோ எம்பிவியின் மந்தமான விற்பனையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

ஹோண்டா மொபிலியோ எம்பிவி, இந்தியாவில் ஜூலை 2014-ல் அறிமுகம் செய்யபட்டது. அப்போது அதன் விற்பனை நல்ல நிலையில் இருந்தது. அது உடனடியாக நல்ல
எண்ணிக்கையில் விற்பனையாகி கொண்டிருந்தது. சில மாதங்களில் அதன் விற்பனை 3,500 என்ற எண்ணிக்கையை கடந்துவிட்டது.

எனினும், இதன் விற்பனை தற்போது இந்தியாவில் பெரிய அளவில் வீழ்ச்சி அடைய துவங்கியது. இந்த ஜனவரி மாதத்தில் வெரும் 441 மொபிலியோ எம்பிவிகள் மட்டுமே விற்பனை ஆனது. ஃபிப்ரவரி மாதத்தில் இதன் விற்பனை இன்னும் குறைவாக இருந்தது. அந்த மாதத்தில், வெரும் 226 கார்கள் மட்டுமே விற்பனை ஆனது.

இடி ஆட்டோ நிறுவனம் வெளியிட்ட செய்திகளின் படி, ஹோண்டா நிறுவனம் இந்த மொபிலியோ எம்பிவியின் உற்பத்தியை நிறுத்த வேறு சில காரணங்களும் இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறது. எம்பிவி சந்தை இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு வரும் மே மாதத்தில், ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி அறிமுகம் செய்யபடலாம். புதிய மாடல் அறிமுகம் செய்யபடும் போது, சந்தையில் உள்ள அதே நிறுவனத்தின் பழைய மாடல்கள்
அதன் விற்பனையை பாதித்து விடக்கூடாது என்ற சிந்தனையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கபடுகிறது.

honda-likely-to-suspend-mobilio-mpv-production-in-india

எப்படியாகினும், ஹோண்டா மொபிலியோ தொடர்ந்து சந்தையில் கிடைத்து கொண்டுதான் இருக்கும். ஏற்கனவே, தயாரித்து முடிக்கபட்ட ஹோண்டா மொபிலியோவின் சரக்குகள் இன்னும் பல்வேறு ஷோரூம்களில் ஏராளமான அளவில் குவிந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளது.

இந்த குவிந்து கிடக்கும் கார்கள் விற்று தீரும் வரை, மொபிலியோ எம்பிவியின் தயாரிப்பு நடவடிக்கையில் ஹோண்டா நிறுவனம் ஈடுபடாது என தகவல்கள் வெளியாகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 22, 2016, 21:09 [IST]
English summary
Honda is in plans to suspend the Production of Mobilio - their only MPV in India. This decision is due to the steep decline in sales. Mobilio was launched in July 2014. SUV market is growing rapidly in India. Honda looks to launch the BRV SUV soon. This is touted to be another reason for the production of Mobilio in India. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+