2 ஆண்டுகளில் 1.6 லட்சம் ஹோண்டா சிட்டி கார்கள் விற்கப்பட்டு சாதனை

By Ravichandran

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளில், 1.6 லட்சம் புதிய ஹோண்டா சிட்டி கார்கள் விற்கபட்டு சாதனை படைக்கபட்டுள்ளது.

அதிக அளவில் விற்கபட்டு சாதனை படைத்த ஹோண்டா சிட்டி செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

2014-ல் அறிமுகம்;

2014-ல் அறிமுகம்;

தற்போது விற்பனையில் உள்ள ஹோண்டா சிட்டி செடான், 2014-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது.

விற்பனையின் சரியான எண்ணிக்கை;

விற்பனையின் சரியான எண்ணிக்கை;

ஜனவரி 2014-ல் அறிமுகம் செய்யபட்டது முதல், இந்தியாவில் மட்டும் சரியாக 1,60,240 ஹோண்டா சிட்டி செடான் கார்கள் விற்கபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

அமோக ஆதரவு;

அமோக ஆதரவு;

2014-ஆம் ஆண்டில் அறிமுகம் ஆனது முதல், இது வரை ஹோண்டா சிட்டி செடான்கள் விற்கபட்டு சாதனை படைக்கபட்டுள்ளது.

அபார அளவிலான இத்தகைய விற்பனை, சி-செக்மண்ட் கார் சந்தையில், இந்த ஹோண்டா சிட்டி முன்னோடியாக விளங்குவதை குறிக்கிறது.

டீசல் இஞ்ஜினால் கிடைத்த அனுகூலம்;

டீசல் இஞ்ஜினால் கிடைத்த அனுகூலம்;

ஹோண்டா சிட்டி மாடல், டீசல் இஞ்ஜினுடனும் அறிமுகம் செய்யபட்டது, ஹோண்டா நிறுவனத்திற்கு பெரிய அனுகூலமாக மாறியது.

இதனால், இந்தியாவில் ஹோண்டா சிட்டி செடான் மாடலின் விற்பனை பெரும் அளவு கூடியுள்ளது.

கிடைக்கும் வேரியண்ட்கள்;

கிடைக்கும் வேரியண்ட்கள்;

தற்போதைய நிலையில், நிகழ் தலைமுறை ஹோண்டா சிட்டி செடான், 12 வேரின்யண்ட்களில் கிடைக்கிறது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

ஹோண்டா சிட்டி பல்வேறு இஞ்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

ஹோண்டா சிட்டி செடான், 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 117 பிஹெச்பி-யையும், 145 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின், 98 பிஹெச்பி-யையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

சிவிடி கியர்பாக்ஸ்-ஸானது, தேர்வு முறையில், 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்-டுடன் மட்டுமே கிடைக்கிறது.

ஹோண்டா சிட்டி செடானின் டீசல் வேரியண்ட், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே கிடைக்கிறது.

விலை ஏற்றத்தின் அளவு;

விலை ஏற்றத்தின் அளவு;

2014-ல் அறிமுகம் செய்யபட்டது முதல், கடந்த 2 ஆண்டுகளில், ஹோண்டா சிட்டி செடான், 18,000 ரூபாய் வரை விலை உயர்த்தபட்டுள்ளது.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

இந்தியாவின் சி-செக்மண்ட் கார் சந்தைகளை பொருத்த வரை, ஹோண்டா சிட்டி காருடன் போட்டி போடும் வகையில், சியாஸ் மற்றும் வெர்னா கார்கள் மட்டுமே உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Honda has sold over 1.6 Lakh units of its Honda city since its launch. Honda City Sedan was launched in January 2014. To be exact, 1,60,240 Honda city Cars are sold until now. As Honda City was with Diesel Engine option too, it helped Honda to increase its overall car sales in India. Honda City is available in 12 variants.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X