ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங் துவங்கியது

By Ravichandran

ஹோண்டா நிறுவனம் வழங்கும் ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் ப்ரீ-புக்கிங் எனப்படும் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங் துவங்கிவிட்டது.

இடி ஆட்டோ இதழ் வெளியிட்ட செய்தி படி, ஹோண்டா ஷோரூம்கள், அறிமுகத்திற்கு காத்திருக்கும் ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் புக்கிங்களை ஏற்க துவங்கியுள்ளன.

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, மே 5-ஆம் தேதி அறிமுகம் செய்யபட உள்ளது.

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, ஹோண்டா மொபிலியோவை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்ட கார் ஆகும். ஹோண்டா மொபிலியோவோடு ஒப்பிடுகையில், ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி சற்று உயர்ந்த தோற்றம் கொண்டுள்ளது. ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, 1 பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1 டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 117 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் இஞ்ஜின், 98 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

honda-starts-br-v-suv-pre-bookings-ahead-launch

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, 3 வரிசை இருக்கை அமைப்பு கொண்டுள்ளதால், இதில் 7 பேர் சவுகரியமாக அமர்ந்து செல்லும் வசதி கொண்ட மாடலாக விளங்குகிறது.

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, 8 லட்சம் ரூபாய் முதல் 13 லட்சம் ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யபடலாம்.


இதர தொடர்புடைய செய்திகள்;

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, இந்தியாவில் மே 5-ல் அறிமுகம்?

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் இந்திய அறிமுகத்திற்கு முன்பாக டீஸர் வெளியீடு

More from DriveSpark

Article Published On: Tuesday, April 19, 2016, 7:07 [IST]
English summary
Honda starts the BR-V Pre-Bookings as Launch Date is nearing fastly. According to ET Auto, Honda dealerships are accepting pre-bookings for upcoming BR-V. Honda BR-V SUV is to be launched on May 5. It will compete with Renault Duster and the Hyundai Creta. Honda BR-V is expected to be priced between Rs. 8 to 13 lakhs. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+