ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, 1,00,000+ புக்கிங்கள் குவித்து சாதனை

By Ravichandran

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, 1,00,000 புக்கிங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

பல்வேறு சாதனைகளை படைத்து வரும் ஹூண்டாய் க்ரெட்டா குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா...

ஹூண்டாய் க்ரெட்டா...

காம்பேக்ட் செக்மெண்டின் கீழ் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யபட்டுள்ள க்ரெட்டா எஸ்யூவி, இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக

பிரபாவித்துள்ளது.

உலகின் வேறு எந்த நாடுகளிலும் அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா எஸ்யூவியை இந்தியாவில் தான் முதன் முதலாக அறிமுகம் செய்தது.

1,00,000+ புக்கிங்;

1,00,000+ புக்கிங்;

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, 2015 ஜூலை மாதம் அறிமுகம் செய்யபட்டது. அறிமுகம் செய்யபட்டது முதல், க்ரெட்டா எஸ்யூவி தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது.

க்ரெட்டா எஸ்யூவி தொடர்பாக இது வரை 5,00,000 விசாரணைகள் மேற்கொள்ளபட்டுள்ளது. இதில் இருந்து, 8 மாதங்களுக்குள் 1,00,000 விசாரணைகள், புக்கிங்களாக மாற்றபட்டு சாதனை படைக்கபட்டுள்ளது. இதில் 56,000 வாடிக்கையாளர்களுக்கு க்ரெட்டா எஸ்யூவி டெலிவரி செய்யபட்டுள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, இந்திய வாகன சந்தைகளுக்கு, மொத்தம் 3 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

இஞ்ஜின் விவரங்கள்;

இஞ்ஜின் விவரங்கள்;

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, பெட்ரோல் வகையில் 1.6 லிட்டர் பெட்ரோல் காம்மா ட்யூவல் விடிவிடி என்ற பெயரிலும், டீசல் வகையில் 1.4 லிட்டர் யூ2 சிஆர்டிஐ டீசல் இஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் யூ2 சிஆர்டிஐ டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் வழங்கபடுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் அனைத்து இஞ்ஜின் மாடல்களும், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

சிறந்த வாரண்டி;

சிறந்த வாரண்டி;

இதன் கிளாஸ்ஸில் ஹூண்டாய் மோட்டார்ஸ்ஸின் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவிக்கு தான் சிறந்த வாரண்டி தேர்வுகள் கிடைக்கிறது.

3 வருடங்களுக்கு அளவில்லா கிலோமீட்டர்களுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

கட்டமைப்பு;

கட்டமைப்பு;

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, திடமான ஹைவ் ஸ்ட்ரக்சர் என்ற முறையில் கட்டமைக்கபட்டுள்ளது.

இந்த முறையிலான கட்டமைப்பு, திடத்தன்மையையும், உறுதிதன்மையையும் வழங்குகிறது.

அமோக வரவேற்பு;

அமோக வரவேற்பு;

தென் கொரியாவை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்பான க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் இந்திய வாகன சந்தைகளிலும், சர்வதேச வாகன சந்தைகளிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

கூட்டபட்ட உற்பத்தி;

கூட்டபட்ட உற்பத்தி;

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி அதிக அளவிலான காத்திருப்பு காலத்துடன் வருகிறது.

இதனால், க்ரெட்டா எஸ்யூவியின் காத்திருப்பு காலத்தை குறைக்கும் வகையில், இதன் உற்பத்தி அதிக அளவில் கூட்டபட்டுள்ளது.

தற்போதைய நிலையில், ஒரு மாதத்திற்கு 13,000 க்ரெட்டா கார்கள் தயாரிக்கப்பட உள்ளது. இதில் 10,000 கார்கள் இந்திய வாகன சந்தைகளுக்கும், 3,000 க்ரெட்டா கார்கள் சர்வதேச வாகன சந்தைகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரூ.8.59 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு அமோக வரவேற்பு : 70,000 மேற்பட்ட புக்கிங்குகளை அள்ளியது!

க்ரெட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Tuesday, March 15, 2016, 18:33 [IST]
English summary
Hyundai Creta Compact SUV has recorded over 1 Lakh Bookings and made huge records. Hyundai Creta was launched in India months ago. From the time of launch, Creta SUV was getting good response from Indian Customers. It comes with considerably long waiting period. To reduce waiting period, Production is increased. To know more, Check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+