ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ போன்ற நேரடி போட்டி மாடல்கள் ஏற்கனவே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் விற்பனையில் இருக்கும் நிலையில், சற்று தாமதமாகத்தான் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன் என்பதுபோல் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சின், அதிக வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவர வந்திருக்கிறது ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் மாடல். விற்பனையில் தொடர்ந்து அசத்தி வரும் இந்த பிரிமியம் ஹேட்ச்பேக் காருக்கு புதிய ஆட்டோமேட்டிக் மாடலின் வருகை விற்பனையில் மேலும் உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் கிடைத்து வரும் நிலையில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 132.3 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

எனவே, இந்த கார் பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்களின் வரிசையில் சேர்ந்துள்ளது. இந்த எஞ்சினுடன் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைந்து செயலாற்றும். அதேநேரத்தில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட 4 மீட்டர் நீளத்துக்கும் குறைவான கார்களுக்கே வரிச்சலுகை கிடைக்கும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஆனால், இந்த காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருப்பதால், வரிச்சலுகை கிடைக்காது. இதனால், விலையும் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆம், இந்த கார் ரூ.9.02 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. எனவே, ஆன்ரோடு விலை ரூ.10 லட்சத்தை தாண்டும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஹூண்டாய் எலைட் ஐ20 ஆட்டோமேட்டிக் மாடல் மேக்னா என்ற ஒரே ஒரு இடைநிலை வேரியண்ட் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் டச்ஸ்கிரீன் வசதியுடன் கூடிய 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஒருங்கிணைந்த வசதிகளை அளிக்கும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

தவிர, வெளிப்புற வெப்பநிலைக்கு தக்கவாறு காரின் உட்புறத்தில் சீரான குளிர்ச்சியை தக்க வைக்கும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, வெளிச்சம் குறையும்போது தானாக ஒளிரும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் சிஸ்டம், எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இதன் பிரிமியம் பிராண்டுக்கு வலு சேர்க்கும் வசதிகள்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

பாக்கெட்டில் சாவி இருந்தாலே ஒரு பொத்தானை அழுத்தி எஞ்சினை ஸ்டார்ட் செய்யக்கூடிய புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், பின்புற இருக்கை பயணிகளுக்கான தனி ஏசி வென்ட் வசதி, ஒரு ஜிபி மெமரி வசதியுடன் கூடிய 2 டின் மியூசிக் சிஸ்டம் போன்றவையும் உள்ளன.

மாருதி பலேனோ சிவிடி மாடல், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ மாடல் மற்றும் ஹோண்டா ஜாஸ் சிவிடி போன்ற பிரிமியம் ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் கார்களுடன் இந்த கார் போட்டி போடும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய ஆட்டோமேட்டிக் மாடலை தவிர்த்து, 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடலிலும், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலிலும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் தொடர்ந்து கிடைக்கும்.

English summary
Read in Tamil: Hyundai Elite i20 automatic launched in India.
Story first published: Friday, September 9, 2016, 9:38 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos