70-வது சுதந்திர தின விழா - ஆகஸ்ட்டில் ஹூண்டாய் நிறுவனத்தின் அட்டகாசமான சலுகைகள்
நமது இந்தியாவின் 70-வது சுதந்திர தின விழா, ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெகு விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக, ஹூண்டாய் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எக்கசக்கமான சலுகைகளை வழங்குகிறது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள், பண்டிகை காலங்களின் போது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குவது வாடிக்கையாகிவிட்டது.
இத்தகைய நடவடிக்கைகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 2 தரப்பிரனருக்கும் லாபகரமானதாகும்.
ஹூண்டாய் நிறுவனம், தங்களின் எந்த மாடல்கள் மீது என்ன என்ன சலுகைகள் வழங்குகிறது என வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

சலுகைகள்;
தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், ஃப்ரீடம் செலப்ரேஷன் ஆஃபர் ('Freedom Celebration Offer') என்ற பெயரில், 70-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களுக்கான சலுகைகளை வழங்குகின்றனர்.
ஃப்ரீடம் செலப்ரேஷன் ஆஃபரில், மாபெரும் தள்ளுபடிகளும், சலுகைகளும் அளிக்கப்படுகிறது.

கிடைக்கும் மாடல்கள்;
ஹூண்டாய் நிறுவனம், இந்த ஃப்ரீடம் செலப்ரேஷன் ஆஃபரில், மொத்தம் 7 மாடல்கள் மீது சலுகைகளையும், ஆதாயங்களையும் அளிக்கின்றனர்.
இந்த சலுகைகள் மற்றும் ஆதாயங்கள், ஆகாசத் 25, 2016 வரை, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஹூண்டாய் ஷோரூம்களிலும் கிடைக்கும்.

இயான் ஹேட்ச்பேக்;
ஹூண்டாய் இயான் ஹேட்ச்பேக், 2.99 லட்சம் ரூபாய் என்ற ஈர்க்கும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த இயான் ஹேட்ச்பேக் மீது 50,000 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடிகளுடன் அளிக்கப்படுகிறது.

ஐ10 ஹேட்ச்பேக்;
ஹூண்டாய் ஐ10 ஹேட்ச்பேக் மீது, அதிகப்படியாக 55,000 ரூபாய் ஆதாயங்களுடன் கிடைக்கிறது.

கிரான்ட் ஐ10 ஹேட்ச்பேக்;
ஹூண்டாய் கிரான்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் வேரியன்ட் மீது 85,000 ரூபாய் ஆதாயமும், இதன் டீசல் வேரியன்ட் மீது 93,500 ரூபாய் ஆதாயமும் கிடைக்கும்.

எலைட் ஐ20;
ஹூண்டாய் எலைட் ஐ20 மாடலின் டீசல் வேரியன்ட், 10,000 ரூபாய் ஆதாயத்துடன் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்;
ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடான் மீதும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும்.
ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடானின் பெட்ரோல் வேரியன்ட் மீது 47,000 ரூபாய் தள்ளுபடியும், டீசல் வேரியன்ட் மீது 57,000 ரூபாய் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.

வெர்னா செடான்;
ஹூண்டாய் வெர்னா செடானின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்கள் இரண்டின் மீதும் 80,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் காத்திருக்கிறது.

சான்ட்டா பீ;
பிரிமியம் எஸ்யூவியான ஹூண்டாய் சான்ட்டா பீ மாடல் மீது 1.50 லட்சம் ரூபாய்க்கான சலுகைகள் கிடைக்கும்.

இறுதி கருத்து;
முன்பு குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல், ஈர்க்கும் சலுகைகளும், கேஷ் பெனிஃபிட் எனப்படும் ரொக்க ஆதாயங்களும், அரசு ஊழியர்களுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்களும் அளிக்கப்படுகிறது.
மேலும், இலவச இன்சூரன்ஸ் மற்றும் எக்ஸ்டண்டட் வாரண்டி எனப்படும் நீட்டிக்கபட்ட வாரண்டி உள்ளிட்ட ரூபங்களிலும், பல்வேறு சிறப்பான ஆதாயங்கள் கிடைக்கிறது.
இதனால், ஹூண்டாய் தயாரிப்புகள் வாங்க நினைத்த வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகள், ஆதாயங்கள் மற்றும் தள்ளுபடிகளை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இதர தொடர்புடைய செய்திகள் - 1;
ஆகஸ்ட் மாதத்தில் கார் நிறுவனங்களின் அசத்தலான தள்ளுபடிகள் - முழு விவரம்
சுதந்திர தினத்தை ஒட்டி 41,000 ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கும் ரெனோ
ஃபோர்டு ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர் விலை அதிரடியாக குறைப்பு - முழு விவரம்

இதர தொடர்புடைய செய்திகள் - 2;
டொயோட்டா லிவா மற்றும் எட்டியாஸ் மீதான தள்ளுபடிகள் - முழு விவரம்
70% தள்ளுபடியில் பைக் சர்வீஸ் மற்றும் கார் பராமரிப்பு ஆக்சஸரீஸ்
ஆகஸ்ட் மாதத்தில் அசத்தலான சலுகைகள் வழங்கும் செவர்லே

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








