புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் படங்கள், வீடியோ வெளியீடு

By Ravichandran

ஹூண்டாய் நிறுவனம், பொலிவு கூட்டப்பட்ட இரண்டாம் தலைமுறை புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் படங்களையும், வீடியோவையும் பேரிஸ் மோட்டார் ஷோவிற்கு முன்னதாக வெளியிட்டுள்ளது.

பொலிவு கூட்டப்பட்ட புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

படங்கள், வீடியோ வெளியீடு...

படங்கள், வீடியோ வெளியீடு...

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், பொலிவு கூட்டப்பட்ட புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் படங்களையும், வீடியோவையும் தாங்களே வெளியிட்டனர்.

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் முறைப்படி, பேரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது.

முக்கியமான மாற்றங்கள்;

முக்கியமான மாற்றங்கள்;

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் முன் பக்கத்தில், மறுவடிவமைக்கப்பட்ட கிரில்லுடன் ஒருங்கிணைக்கப்பட்ட 2 வட்ட வடிவிலான புரொஜெக்டர் போன்ற அமைப்பு உள்ளது.

இது ஹெட்லம்ப்களோ அல்லது ஃபாக்லேம்ப்களோ அல்ல. இவை டிஆர்எல்-கள் எனப்படும் டேடைம் ரன்னிங் லைட்கள் ஆகும்.

பின்பக்க டிசைன்;

பின்பக்க டிசைன்;

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் பின் பக்கத்தின் பம்பர் மறு வடிவமைக்கபட்டு, இதன் டெயில் லேம்ப்களில் குரோம் பூச்சு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முன் தோற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில், இதன் பின் பக்கத்தில் உள்ள ஃபாக் லேம்ப்களுடன் ஒரு புதிய பிளாக் அழகு கூட்டும் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

சைட் புரோஃபைல்;

சைட் புரோஃபைல்;

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் பக்கவாட்டில், புதிய பிளாஸ்டிக் மோல்டிங் ட்ரிம் மற்றும் புதிய 14 அல்லாய் வீல்கள் பொருத்தபட்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் உட்புறத்தில், ரெட் நிற கலப்பு கொண்ட டியூவல் டோன் டேஷ்போர்ட் உள்ளது.

அம்சங்கள்;

அம்சங்கள்;

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கில், நேவிகேஷன், ஆப்பில் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ வசதியுடைய புதிய டச்ஸ்கிரீன் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கில், ஃபிரண்ட் கொள்ளிஷன் வார்னிங் சிஸ்டம் (Front Collision Warning System (FCWS)) என்ற முன் பக்க விபத்து தடுக்கும் வசதி மற்றும் ஃபிரன்ட் கேமரா உதவியுடன் செயல்படும் லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம் (Lane Departure Warning System (LDWS)) சந்துகளில் நுழையும் முன் வழங்கும் எச்சரிக்கை சமிக்ஞை வழங்கும் வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக், இந்தியாவில் வெகுவாக எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது.

தற்போது, ஹூண்டாய் நிறுவனம் இந்த படங்களை தற்போது வெளியிட்டுயுள்ளதை பார்த்தால், இது 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் விரைவில் அறிமுகம்

ஐ10 தொடர்புடைய செய்திகள்

ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Wednesday, August 31, 2016, 17:09 [IST]
English summary
Hyundai has revealed Pictures and Video of facelifted second-generation i10 ahead of its Formal debut at 2016 Paris Motor Show. This new model has active safety system like Front Collision Warning System (FCWS) and Lane Departure Warning System (LDWS) using front camera's assistance. It is expected to be launched in 2017. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+