ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக்கின் படங்கள் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டது
ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாம் தலைமுறை ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக்கின் படங்கள் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டது.
புதிய ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புதிய ஹூண்டாய் ஐ30...
தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், தென் கொரிய சந்தைகளுக்காக தாங்கள் தயாரிக்கும் 2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக்கின் விவரக்குறிப்புகளை அலுவல் ரீதியான அறிமுகத்திற்கு முன்பாக வெளியிட்டனர்.
2017 ஐ30 ஹேட்ச்பேக் உடைய ஒரு டிவி விளம்பரத்தை இந்த நிறுவனம் வெளியிட்டது.

அறிமுகம்;
ஹூண்டாய் நிறுவனம் இந்த ஹேட்ச்பேக்கை, இந்த செப்டம்பர் 8-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளனர்.
எனினும், பொதுமக்கள் காணும் வகையிலான அலுவல் ரீதியான அறிமுகம், செப்டம்பர் இறுதியில் நடைப்பெறும் பேரிஸ் மோட்டார் ஷோவில் நடைபெற உள்ளது.

ட்ரிம்கள்;
தென் கொரியாவில், புதிய ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக், ஸ்மார்ட், மாடர்ன், பிரமியம், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரிமியம் என மொத்தம் 5 ட்ரிம்களில் கிடைக்கிறது.

இஞ்ஜின்கள்;
புதிய ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக், மொத்தம் 3 விதமான இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. புதிய ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக்கின் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் 138 பிஹெச்பியையும், 1.6 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் 201 பிஹெச்பியையும், வெளிப்படுத்துகிறது.
மேலும், இது ஒரு 1.6 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் தேர்வும் கொண்டுள்ளது.

டிரான்ஸ்மிஷன்;
புதிய ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் இஞ்ஜின்கள் 7-ஸ்பீட் டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொண்டிருக்கும். எனினும், இந்த மாடல், மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொண்டிருக்குமா, இல்லையா என்பது குறித்து ஹூண்டாய் நிறுவனம் உறுதி செய்யவில்லை.

சிறப்பு அம்சங்கள்;
புதிய ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக், முழு எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி தேடும் ரன்னிங் லைட்கள், எல்இடி டர்ன் இன்டிக்கேட்டர்கள், எலக்ட்ரிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மற்றும் மடக்கக்கூடிய ஓஆர்விஎம்கள், 18-இஞ்ச் அல்லாய் வீல்கள், லெதர் ஸ்டீயரிங் வீல்கள், ஹீட்டட் ஃபிரன்ட் சீட்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
மேலும், 8-இஞ்ச் அல்லாய் வீல்கள், 7-ஸ்பீக்கர்கள் உடைய ஜேபிஎல் பிரிமியம் சவுன்ட் சிஸ்டம், 7 ஏர் பேக்குகள், இஎஸ்சி எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி, கண்ட்ரோல், விஎஸ்எம் எனப்படும் வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட், ஏடிசிசி எனப்படும் அட்வான்ட்ஸ்ட் டிராக்ஷன் கார்ணரிங் கண்ட்ரோல், ஹெச்ஏசி எனப்படும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், பீஎஸ்டி எனப்படும் பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








