ஹூண்டாய் வழக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் - முழு விவரம்
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் பல்வேறு தயாரிப்புகள் மீது ஏராளமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்குகின்றனர்.
ஹூண்டாய் மோட்டார்ஸ் வழங்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் வழங்கும் சலுகலைகள்;
தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் மீது பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
ஹூண்டாய் வழங்கும் இந்த சலுகைகள் அனைத்தும் மெகா மான்சூன் கார்னிவல் ஸ்கீம் ('Mega Monsoon Carnival') என்ற பெயரில் கிடைக்கிறது.
இந்த சலுகைகள் மொத்தம் 8 மாடல்கள் மீது கிடைக்கும். அனைத்து ஆதாயங்கள் மற்றும் சலுகைகள், இந்திய முழுவதும் உள்ள அனைத்து ஹூண்டாய் ஷோரூம்களிலும், ஜூலை 29-ஆம் தேதி வரை கிடைக்கிறது.

எலைட் ஐ20;
ஹூண்டாய் எலைட் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக் மீது தான் மிகவும் குறைந்த மதிப்பிலான ஆதாயம் கிடைக்கிறது.
ஹூண்டாய் எலைட் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக்கின் டீசல் மாடல் மீது, மொத்தம் 10,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் வழங்கப்படுகிறது.

இயான்;
ஹூண்டாய் இயான் மாடலின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்கள் மீது 40,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் வழங்கப்படும்.

ஐ10;
ஹூண்டாய் ஐ10 மாடலின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்கள் மீது, 42,500 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும்.

எக்ஸ்சென்ட்;
ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மாடலின் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட் மீது, 47,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள், சலுகைகள் கிடைக்கிறது.
ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மாடலின் டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட் மீது, வாடிக்கையாளர்களுக்கு 52,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள், சலுகைகள் வழங்கப்படுகிறது.

கிரான்ட் ஐ10;
ஹூண்டாய் கிரான்ட் ஐ10 மாடலின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்கள் மீது, 63,000 ரூபாய் மதிப்பு கொண்ட ஆதாயங்கள் கிடைக்கும்.
ஹூண்டாய் கிரான்ட் ஐ10 மாடலின் டீசல் வேரியன்ட் மீது, 71,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் கிடைக்கிறது.

வெர்னா;
ஹூண்டாய் வெர்னா மாடலின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்ட 2 வேரியன்ட்கள் மீதும் 80,000 ரூபாய் மதிப்பு கொண்ட ஆதாயங்கள், சலுகைகள் வழங்கப்படுகிறது.

எலன்ட்ரா;
ஹூண்டாய் எலன்ட்ரா மாடலின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்ட 2 வேரியன்ட்களின் மீதும் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள், சலுகைகள் கிடைக்கிறது.

சான்ட்டா பீ;
ஹூண்டாய் சான்ட்டா பீ மாடல் மீதும் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது.

சிறப்பு சலுகை;
இந்த ஜூலை மாதத்தின் போது, ஒவ்வொரு டெஸ்ட் டிரைவ் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கும், ஹூண்டாய் மோட்டார்ஸ் வழங்கும் யூரோ 2016 (EURO 2016) மேர்ச்சண்டைஸ் வழங்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் சலுகைகள், தள்ளுபடிகள் - முழு விவரம்
75% தள்ளுபடியில் மழைகாலத்திற்கு தேவையான ஆட்டோமொபைல் ஆக்சஸரீஸ்
ஸ்கோடா ரேபிட் செடான் மீது 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகள் - முழு விவரம்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








