ஹூண்டாய் கார்களுக்கு அதிரடி சலுகைகள் - விபரம்!

Written By:

ஆண்டு கடைசி நெருங்கி வருவதையொட்டி கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில், சிறப்பு சேமிப்பு சலுகைகளை ஹூண்டாய் கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

தனது பெரும்பாலான கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை கார்ப்பரேட் நிறுவன பணியாளர்களுக்கு அறிவித்துள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ். அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான் காரின் விலையில் ரூ.55,000 வரை தள்ளுபடியாக வழங்குகிறது ஹூண்டாய் நிறுவனம். அதுதவிர்த்து, ரூ.2,000 கூடுதல் சலுகையாக கார்ப்பரேட் பணியாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். மொத்தமாக ரூ.57,000 சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கிராண்ட் ஐ10 காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.76,000 தள்ளுபடியும், டீசல் மாடலுக்கு ரூ.84,000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவன பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடியாக பெறலாம்.

 ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடான் காருக்கு ரூ.40,000 வரை தள்ளுபடியும், கார்ப்பரேட் நிறுவன பணியாளர்கள் கூடுதலாக ரூ.3,500 வரை தள்ளுபடியாக பெறும் வாய்ப்பு உள்ளது.

ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலான ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு ரூ.10,000 தள்ளுபடியாகவும், கார்ப்பரேட் பணியாளர்கள் ரூ.5,000 வரையிலும் தளளுபடியாக பெறலாம்.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா காரின் பேஸ் மாடல் ரூ.6.99 லட்சம் என்ற சிறப்பு விலையில் கிடைக்கும். மேலும், கார்ப்பரேட் பணியாளர்கள் ரூ.20,000 தள்ளுபடியும் பெற முடியும். மொத்தமாக ரூ.90,000 தள்ளுபடியில் ஹூண்டாய் வெர்னா காரின் பேஸ் மாடல் கிடைக்கிறது.

 இதர மாடல்கள்

இதர மாடல்கள்

ஹூண்டாய் எலான்ட்ரா மற்றும் சான்டா ஃபீ கார்களுக்கு தலா ரூ.20,000 வரை தள்ளுபடி சலுகையாக பெறும் வாய்ப்புள்ளது. இச்சலுகைகள் குறித்து தெரிந்துகொள்ள அருகாமையிலுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

English summary
Hyundai India has introduced a special discount offers for corporates across its entire product portfolio.
Story first published: Wednesday, November 30, 2016, 17:17 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos