ஹூண்டாய் வழங்கும் மெகா எக்ஸ்பீரியன்ஸ் ஹூண்டாய் புரோகிராம் துவக்கம்
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் மற்றும் இந்தியாவிலும் சர்வீஸ் முகாம்களை நடத்துகின்றனர்.
மெகா எக்ஸ்பீரியன்ஸ் ஹூண்டாய் புரோகிராம் ('Mega Experience Hyundai Program') என்ற பெயரில் நடத்தப்படும் இந்த சர்வீஸ் முகாம்கள், மே 22-ஆம் தேதி துவங்கியது.
மெகா எக்ஸ்பீரியன்ஸ் ஹூண்டாய் புரோகிராம் உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் நடத்தபடுகிறது. இந்தியாவில், மொத்தம் 324 நகரங்களில், 567 இடங்களில் இந்த சர்வீஸ் முகாம்கள் நடத்தபடுகிறது.
பயிற்சி பெற்ற ஹூண்டாய் டெக்னீஷியன்கள் 18 நிலைகள் கொண்ட செக்-கப் மேற்கொள்ளபடுகிறது. மெகா எக்ஸ்பீரியன்ஸ் ஹூண்டாய் புரோகிராம், மக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்கள், குடியிருப்பு சமூகங்கள், பார்க்கிங் செண்டர்கள் ஆகிய இடங்கலிலும் நடைபெறுகிறது. மேலும், இந்த சர்வீஸ் முகாம்கள் பெட்ரோல் பம்ப்களிலும் நடத்தபடுகிறது.
மெகா எக்ஸ்பீரியன்ஸ் ஹூண்டாய் புரோகிராம் என்ற இந்த சர்வீஸ் முகாம், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் நிகழ்த்திய சாதனைகளை கொண்டாடும் விதமாக நிகழ்த்தபடுகிறது. தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் பிரவேசம் செய்த 20-ஆம் ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. ஹூண்டாய் நிறுவனம் நடத்தும் இந்த மெகா எக்ஸ்பீரியன்ஸ் ஹூண்டாய் புரோகிராம் சர்வீஸ் முகாமில் வாடிக்கையாளர்கள் நிகரற்ற அனுபவங்களை பெற முடியும்.

சர்வீஸ்கள், லேபர் சார்ஜ்கள், இலவச கார் வாஷ் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களின் மீது, ஈர்க்கும் வகையிலான ஸ்கிராட்ச் கார்ட்கள் வழங்கபடுகிறது. இந்த ஆதாயங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உபயோகித்து கொள்ளலாம். மெகா எக்ஸ்பீரியன்ஸ் ஹூண்டாய் புரோகிராமின் போது, வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதத்திலான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகிறது.
சமீபத்தில் தான், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், ஹூண்டாய் எக்ஸன்ட் 20-ஆம் ஆண்டு விழா ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தனர். தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் மேலும் சில சிறப்பான ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








