இந்தியாவில் களமிறங்குகிறது பேட்டரி மற்றும் பெட்ரோலில் இயங்கும் ஹுண்டாய் ஐயோனிக் கார்...

By Meena

மாற்றம் ஒன்றே மாறாததது என்பது உலகறிந்த உண்மை. கலாசாரம், பண்பாடு, உறவுகள் என எதெல்லாம் மாறாமல் நிலைத்திருக்க வேண்டும் என்று நாம் கட்டிக்காப்பாற்றி வருகிறோமோ, அவை கூட ஏதோ ஒரு வடிவில் மாற்றமடைந்துதான் வருகின்றன.

இது இயற்கையின் நியதி. மாற்றங்கள் புதிய வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தால் அவை நிச்சயம் வரவற்கத்தக்கவையே.

ஹூண்டாய் ஐயோனிக்

விவசாயத்தில் இருந்து விஞ்ஞானம் வரை அனைத்துமே பரிணமித்து வருகின்றன. ஆட்டோ மொபைல் துறை மட்டும் என்ன அதில் குறைந்ததா? கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் வெறும் உருட்டுக் கட்டை சக்கரங்கள், இன்று ஆடி, ஸ்கோடாவாக எப்படி உருவெடுத்திருக்கின்றன? என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

அதன் தொடர்ச்சியாக கார்களில் பல புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. ஹுண்டாய் நிறவனமும் தனது ஐயோனிக் என்ற புதிய எலெக்ட்ரிக் காரில் இப்படி ஒரு புதுமையைத்தான் புகுத்தி உள்ளது.

முழுக்க, முழக்க எலெக்ட்ரிக் பேட்டரிகளைக் கொண்டு இயங்கும் ஐயோனிக் எலெக்ட்ரிக் மாடலையும், ஹைபிரிட் மாடலையும், பிளக் - இன் ஹைபிரிட் மாடலையும் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகிறது.

அதில் ஹைலைட் பிளக் - இன் ஹைபிரிட் மாடல்தான். எலெக்ட்ரிக் பேட்டரியிலும், பெட்ரோல், டீசலிலும் இயங்கும் பன்முகத் தன்மை கொண்டது இந்த மாடல். தேவைப்பட்டால் எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம். இல்லேயேல் பேட்டரி சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒன்று தீர்ந்தாலும், மற்றொன்றின் உதவியில் வண்டி நிற்காமல் ஜிவ்வென்று பறக்கும்.

இத்தகைய எலெக்ட்ரிக் மாடல் வண்டிகளை உற்பத்தி செய்யவும், விற்கவும் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளிக்க முன்வந்திருப்பதால், பிளக் - இன் ஹைபிரிட் மாடலை இந்தியாவில் களமிறக்க முடிவு செய்துள்ளதாம் ஹுண்டாய் நிறுவனம்.

8.9 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட லித்தியம் பேட்டரி இந்த மாடலில் உள்ளது அதை சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணிக்குமாம்.

இந்த மாடலில் உள்ள 1.6 லிட்டர் திறன் கொண்ட 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினில் 45 கிலோவாட் ஆற்றலுடைய எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சினானது 104 பிஎச்பி முறுக்கு விசை மற்றும் 147 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் உடையது.

இதைத் தவிர, இண்டீரியர் மற்றும் வெளிப்புறத்தில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது ஐயோனிக் மாடல். மொத்தத்தில், இத்தகைய புதுமையான கார், இந்திய மார்க்கெட்டுக்கும் வரும் தினத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ஆட்டோ மொபைல் ஆர்வலர்கள்.

Most Read Articles
English summary
Hyundai Looking To Bring The Ioniq Plug-In Hybrid To India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X