ஹூண்டாய் நிறுவனத்தின் ‘ப்ரீ கார் கேர் கிளினிக்’ சர்வீஸ் முகாம் துவங்கியது

By Ravichandran

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், 'ப்ரீ கார் கேர் கிளினிக்' என்ற பெயரில் தங்களின் சர்வீஸ் முகாமை இன்று (12 மார்ச்) துவக்கியுள்ளது.

பல்வேறு கார் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு, சர்வீஸ் முகாம்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ஹெச்எம்ஐஎல் அல்லது ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் என அழைக்கபடும் ஹூண்டாய் நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக சர்வீஸ் முகாம்களை துவக்கியுள்ளனர்.

இன்று (12 மார்ச்) துவங்கிய இந்த ப்ரீ கார் கேர் கிளினிக் என்ற சர்வீஸ் முகாம், இந்தியா முழுவதிலும் உள்ள ஹூண்டாய் சர்வீஸ் மையங்களில் மார்ச் 21 வரை நடத்தபடுகிறது. இந்த சர்வீஸ் முகாம், ஹூண்டாய் நிறுவனம் நடத்தும் 21-வது பதிப்பு சேவை முகாம் ஆகும்.

இந்த சர்வீஸ் முகாம் குறித்து கருத்து தெரிவித்த ஹூண்டாய் நிறுவன உயர்அதிகாரி ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா, "இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளும், தேர்வுகளும் மாறிக்கொண்டே இருக்கிறது" என்றார். மேலும், "நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரத்திலான தயாரிப்புகள் மற்றும் உயரிய வகையிலான சேவையை வழங்குவதில் முனைப்புடன் உள்ளோம்" என்றார்.

ஹூண்டாய் நிறுவனத்தின் ப்ரீ கார் கேர் கிளினிக் சேவை முகாம், வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த ஆண்டும் மக்களிடம் இருந்து அதே அல்லது கூடுதல் அளவிலான பங்கேற்ப்பை ஹூண்டாய் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

hyundai-motors-21st-free-car-care-clinic-begins-all-across-india

ஹூண்டாய் நிறுவனம் மொத்தம் 90 விதமான இலவச செக்-அப்களை மேற்கொள்கிறது. இதில், இஞ்ஜின், டிரான்ஸ்மிஷன், அண்டர்-பாடி, ஏசி, எஸ்டீரியர் (வெளிப்புற அமைப்பு), எலக்ட்ரிகல் சிஸ்டம் உள்ளிட்டவற்றின் சோதனைகளையும் மேற்கொள்கிறது.

இந்த ப்ரீ கார் கேர் கிளினிக் சேவை முகாம்களின் போது, வாடிக்கையாளர்களுக்கு, உதிரி பாகங்கள், லேபர் செலவு, தேர்ந்தெடுக்கபட்ட ஆக்சஸரீஸ் மற்றும் பிற மதிப்பு கூட்டபட்ட சேவைகளின் மீது தள்ளுபடிகள் வழங்கபடுகிறது.

கூடுதலாக, பழைய கார்களின் மீதான எக்ஸ்சேஞ்ஜ்ஜின் நீட்டிக்கபட்ட வாரண்டியும் வழங்கபடுகிறது.

ஹூண்டாய் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்கள் தயாரிப்புகளுடன் கொண்டுள்ள நீண்ட தொடர்புக்கு மரியாதை செலுத்தும் வகையில், 4 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான ஹூண்டாய் கார்கள் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகளும் வழங்கபடுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 12, 2016, 21:25 [IST]
English summary
Hyundai Motor India Ltd. (HMIL), commeced their 21st edition of nationwide 'Free Car Care Clinic' service camp. This customer connect service is held at all Hyundai service outlets across India. This service camp is held from March 12 - 21, 2016. Hyundai conducts free 90 point check-ups including engine, transmission, under-body, AC, exterior, electrical system, etc. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+