ஹூண்டாய் நிறுவனம், 1,000,000 ஐ20 கார்களை விற்று சாதனை
ஹூண்டாய் நிறுவனம், 1 மில்லியன் ஐ20 ஹேட்ச்பேக் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் படைத்த இந்த அபார சாதனை குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

1,000,000 சாதனை...
ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக், தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கி வரும் ஹூண்டாய் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் கார் மாடல் ஆகும்.
சமீபத்தில் தான் ஹூண்டாய நிறுவனம், தங்களின் ஹூண்டாய் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக் மாடலில், உலக அளவில் ஒரு மில்லியன் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

அதிக விருதுகள் வென்ற மாடல்;
ஹூண்டாய் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் ஹூண்டாய் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக் தான், இந்தியாவில் அதிகம் விருதுகள் வென்ற மாடல் என்ற பெருமை பெற்றுள்ளது.
அறிமுகம் செய்யப்பட்டது முதல் தற்போது வரை, மொத்தம் 34 விருதுகளை வென்றுள்ளது.

அறிமுகம்;
ஹூண்டாய் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக், கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
அப்போது முதல் தற்போது வரை, ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் தான், ஹூண்டாய் நிறுவனத்தின் சிறந்த முறையில் விற்பனையாகும் மாடலாக உள்ளது.

அறிமுகம் செய்யபட்ட மாடல்கள்;
ஹூண்டாய் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக் அறிமுகம் செய்யபட்டது, ஐ20, ஐ20 எலைட் மற்றும் எலைட் ஆக்டிவ் என்ற பெயர்களில் 3 புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சிஇஓ கருத்து - 1;
இந்த அபாரமான சாதனை குறித்து ஹூண்டாய மோட்டார் இந்தியா லிமிடெட் (ஹெச்எம்ஐஎல்) நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ-வான ஒய்.கே. கூ மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.
"இந்த அசாதாரண மைல்கல் எட்டியது, ஹூண்டாய் நிறுவனத்தின் நீடித்து நிலைக்கும் தன்மை, ஒரு மாடல் பெற்றுள்ள உலகளாவிய ஏற்பு தன்மைக்கு சான்றாக அமைந்துள்ளது. மேலும், ஐ20 ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்டியான டிசைன், கிளாஸ்ஸில் உயர்ந்த செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாத்தியமானது" என ஒய்.கே. கூ கூறினார்.

சிஇஓ கருத்து - 2;
இந்த 1,000,000 ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் விற்பனை செய்த சாதனை குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். இதன் மூலம், உலக அளவிலும், இந்தியா அளவிலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்த திருப்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
ஹூண்டாய் பிராண்ட் ஆனது, தரம், புதுமை மற்றும் பைசாவிற்கு ஏற்ற மதிப்பு வழங்குகிறது. மேலும், இதன் உயர் தொழில்நுட்பம், ஸ்டைலிங் மற்றும் செயல்திறன் உள்ளிட்டவற்றிற்காக ஏராளமான விருதுகளை வென்று வருகிறது" என ஒய்.கே. கூ தெரிவித்தார்.

போட்டி;
ஹூண்டாய் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக், இந்திய வாகன சந்தைகளில் மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஃபியட் புன்ட்டோ ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள் - 1;
ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக் 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் விரைவில்...
பெங்களூரில், ஹூண்டாய் ஐ20 ரிவர்ஸ் டிரைவ் போட்டி: வாடிக்கையாளர் ஆர்வரம்
சாட்சாத் இது ஹூண்டாய் ஐ20 கார்தான்

இதர தொடர்புடைய செய்திகள் - 2;
தீபாவளி ரிலீசாக வரும் புதிய ஹூண்டாய் ஐ20 கார்!
ஐ20 தொடர்புடைய செய்திகள்
ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








