ஹூண்டாய் ஏஹெச் - க்விட் காருக்கு போட்டியாக புதிய மாடல்?
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், ரெனோ நிறுவனம் வழங்கும் க்விட் காருக்கு போட்டியாக ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் வழங்க உள்ள புதிய கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு - இந்த ஸ்லைடரில் காட்டபட்ட படங்கள், மாதிரி படங்கள் ஆகும்

ஏஹெச்;
தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம், க்விட் காருக்கு போட்டியாக தாங்கள் உருவாக்கி வரும் காருக்கு, ஏஹெச் என்ற கோட் நேம் (குறியீடுபெயர்) வழங்கியுள்ளனர்.

க்விட் மாடலுக்கு போட்டி...
ரெனோ நிறுவனம் வழங்கும் க்விட் மாடல், இந்திய வாகன சந்தைகளில் மிகவும் புகழ் பெற்ற மாடலாக விளங்குகிறது.
ரெனோ க்விட் செலுத்தி வரும் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில் ஹூண்டாய் நிறுவனமும், க்விட் போன்ற ஒரு சிறிய அளவு கொண்ட காரை அறிமுகம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

சிறிய கார்;
தற்போதைய நிலையில், இயான் காம்பேக்ட் ஹேட்ச்பேக் கார் தான் ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் மிக்ச்சிறிய மாடலாக உள்ளது.
அதிகமான மக்கள் ஆதரவு பெற்ற செக்மண்ட்களில் ஏராள்மான மாடல்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.

அறிமுகம்;
ஹூண்டாய் ஏஹெச் மாடல், இந்தியா மற்றும் பல்வேறு சர்வதேச வாகன சந்தைகளிலும் 2018-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபடலாம்.

இலக்கு;
ஹூண்டாய் ஏஹெச் மாடல் அறிமுகம் செய்யபடுவதற்கு முன்பே, முதல் ஆண்டிலேயே இந்த மாடலில் சுமார் 1 லட்சம் கார்கள் விற்கபட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;
ஹூண்டாய் ஏஹெச் மாடலுக்கு, இயான் மாடலில் பயன்படுத்தபடும் அதே இஞ்ஜின் பயன்படுத்தபட உள்ளது.
ஹூண்டாய் ஏஹெச் மாடலில், 3 சிலிண்டர்கள் கொண்ட, 800 சிசி (0.8 லிட்டர்) இஞ்ஜின் மற்றும் தேர்வு முறையிலான 1,000 சிசி (1 லிட்டர்) இஞ்ஜின் பொருத்தபடும்.

ஏஎம்டி;
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், ஹூண்டாய் ஏஹெச் மாடலுக்கு மதிப்பு கூட்டும் வகையில், தேர்வு முறையிலான ஏஎம்டி வசதியினை வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

க்விட் / ஏஹெச்;
ரெனோ நிறுவனம், க்விட் காம்பேக்ட் ஹேட்ச்பேக் மாடலுக்கு கிராஸ் ஓவர் நிலைபாட்டை வழங்கியுள்ளனர். மேலும், க்விட் ஈர்க்கும் விலையில் விற்கபடுவதனால், இது இதன் அபாரமான விற்பனைக்கு உதவிகரமாக விளங்குகிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவன வடிவமைப்பாளர்கள், இந்த ஏஹெச் மாடலுக்கும், க்விட் காம்பேக்ட் ஹேட்ச்பேக் மாடலுக்கு வழங்கபட்ட கிராஸ் ஓவர் போன்ற நிலைபாட்டை ஏற்க உள்ளனர்.

போட்டி;
ஹூண்டாய் ஏஹெச் மாடலுக்கு இந்திய வாகன சந்தைகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. ஹூண்டாய் ஏஹெச் மாடல், ரெனோ க்விட், டட்சன் ரெடி-கோ, மாருதி சுஸுகியின் ஆல்டோ 800 ஆகியவை மிக தீவிரமான போட்டி மாடல்களாக விளங்குகின்றன.
மாருதி சுஸுகி நிறுவனமும், தங்களின் ஆல்டோ 800 மாடலுக்கு கிராஸ் ஓவர் நிலைபாட்டை ஏற்க உள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், ஹூண்டாய் ஏஹெச் மாடலுக்கு ஏற்பட காத்திருக்கும் போட்டி, இன்னும் அதிகமாக இருக்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;
தனி ஒருவன்... ரெனோ க்விட் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் உலகளாவிய அறிமுகம் டெல்லியில் நடைபெற்றது
ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








