ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஸ்பை படங்கள் வெளியான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்...

ஸ்பை படங்கள்...

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், டூஸான் எஸ்யூவியை இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த டூஸான் எஸ்யூவியின் சோதனைகளை இந்திய சாலைகளில் மேற்கொண்டு வருகிறது.

இப்படி சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கப்பட்ட டூஸான் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. இந்த ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, இந்தியாவில் முதன் முறையாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படது.

உற்பத்திநிலை மாடல்;

உற்பத்திநிலை மாடல்;

தற்போது ஸ்பை படங்கள் வெளியாகிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள மாடல் போல் உள்ளது.

இதற்கு குறிப்பிடதக்க உருமறைப்பு செய்யப்பட்ட போதும், இந்த எஸ்யூவி தனித்துவமான உருவத்தை மறைக்க முடியவில்லை.

முன் தோற்றம்;

முன் தோற்றம்;

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் முன் பக்கத்தில், ஹெக்ஸகனல் கிரில்லின் 2 பக்கத்திலும் ஆங்குளார் ஹெட்லேம்ப்கள் உள்ளன.

இதன் ஃபாக் லேம்ப்கள் மற்றும் இரு பக்கத்திலும் உள்ள எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்கள் குளுமையாக காட்சியளிக்கிறது.

பின் தோற்றம்;

பின் தோற்றம்;

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் பின் பக்கத்தில் உள்ள மேற்கூரையில் சிறிய ஸ்பாய்லர் உள்ளது. ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் பின் பக்கத்தின் முனைகளில் உள்ள சில கூடுதல் வளைவுகளால், மெல்லியதாக உள்ள டெயில்லேம்ப்களும் சற்று வீங்கியவாறு காட்சியளிக்கிறது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் உள்ள இன்டீரியர் அமைப்பு, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 6-ஆம் தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானை நினைவுப்படுத்துவது போல் உள்ளது.

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானில் உள்ள 8-இஞ்ச் ஹெச்டி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ், ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்தியாவிற்கான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் உபயோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இஞ்ஜின், 136 பிஹெச்பியையும், 373 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

இந்தியாவிற்கான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹூண்டாய் நிறுவனம், இந்த ஹூண்டாய் டூஸான் எஸ்யூவிக்கு 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வையும் வழங்கும் வாய்ப்புகள் உள்ளது.

பெட்ரோல் வேரியன்ட்;

பெட்ரோல் வேரியன்ட்;

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் பெட்ரோல் வேரியன்ட்டும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது?

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, 2016 இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Spy Pictures Credit ; https://www.facebook.com/groups/4x4India/permalink/1325155797524619/

Most Read Articles
English summary
Spy Pics of Production Ready Hyundai Tucson SUV while spotted testing was released. Hyundai is to launch Tucson SUV In India and is putting the SUV to test through rough roads of India. Tucson was first showcased at 2016 Delhi Auto Expo. India bound Tucson is expected to use 2.0-litre diesel engine, which produces 136bhp and 373Nm of torque. To know more, check here...
Story first published: Friday, September 2, 2016, 19:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X