ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, 2016 இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது.
ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் டூஸான்...
தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் அடுத்த சிறப்பான தயாரிப்பான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

அறிமுகத்திற்கான நோக்கம்;
ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஹூண்டாய் சான்ட்டா பீ ஆகிய மாடல்களுக்கு இடையேயான இடைவெளியை குறைக்க உள்ளது.

இஞ்ஜின்;
ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, 2.0 லிட்டர், 4 - சிலிண்டர்கள் உடைய டர்போ சார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கலாம்.
இதன் இஞ்ஜின், 175 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 195 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் இஞ்ஜின், 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடேன் இணைக்கபட்டுள்ளது.

போட்டி;
ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, ஹோண்டா சிஆர்-வி, செவர்லே டிரெயில்பிளேசர் மற்றும் ஃபோர்டு என்டெவர் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்;
ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

விலை;
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியை சவாலான விலையில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, 17.5 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் வெற்றிக்கு அதன் வெற்றிக்கு மிக முக்கியமான விஷயமாக இருக்கும்.

முக்கிய குறிப்பு;
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியை பெட்ரோல் வேரியன்ட் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றை தேர்வு முறையில் கூட வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்;
ஹூண்டாய் டுஸ்கான் பிரிமியம் எஸ்யூவி, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?
2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட், பெய்ஜிங் மோட்டார் ஷோவில் அறிமுகம்
ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்
ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்
ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்
ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்
ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்


Click it and Unblock the Notifications








