பெங்களூர் குளிரில் அனலை பரப்பிய கார் பந்தயம்- எக்ஸ்க்ளூசிவ் கவரேஜ்!
நீண்ட நாட்களுக்கு பிறகு பெங்களூரில் நடந்த 'குவார்ட்டர் மைல்' வகை கார் பந்தயம் பார்வையாளர்களையும், ஆட்டோமொபைல் ஆர்வலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த பந்தயத்தை இன்னர் லைன் ரேஸிங் க்ளப்[ILRC] ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 9ந் தேதி பெங்களூரிலுள்ள நைஸ் ரிங் ரோட்டில் நடந்த இந்த கார் பந்தயத்தின் பிரத்யேக படங்கள், தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
இந்த குவார்ட்டர் மைல் வகை கார் பந்தயத்தில் மாருதி 800 கார் முதல் சுப்ரா கார் மாடல்கள் வரை பங்கேற்றன. இந்த பந்தயத்தில் டீசல் கார்களும் டியூனிங் செய்யப்பட்ட எஞ்சின்களுடன் பலத்தை காட்டின.
பெரும் சப்தத்துடன் மிரட்டிய ரேஸுக்காக மாற்றங்கள் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டி கார்களை அதிக அளவில் காண முடிந்தது. மேலும், ரேஸ் கார்களை டியூனிங் செய்வதில் புகழ்பெற்ற ராஜ் ஹிங்கோராணி, இந்த பந்தயத்தில் பங்கேற்ற சில கார்களை டியூனிங் செய்து கொடுத்துள்ளார்.
இந்த பந்தயத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மாருதி ஸென் கார்கள். கால் மைல் தூரத்தை சிட்டு போல பறந்து எட்டியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இந்த மோட்டார் பந்தயம் மோட்டார் பந்தய ரசிகர்களின் கண்களுக்கும், காதுகளுக்கும் பெரும் விருந்தாக அமைந்தது.
இந்த நிலையில், வரும் 16ந் தேதி பைக்குகளுக்கான குவார்ட்டர் மைல் பந்தயம் நடைபெற இருக்கிறது. இதிலும், ஏராளமான பைக் பந்தய வீரர்கள் கலந்து கொள்ள ஆர்வமுடன் காத்துக் கிடக்கின்றனர். நாமும்தான்...!!


Click it and Unblock the Notifications











































































