மங்களூர் சாலைகளை அலங்கரிக்கும் இந்தியாவின் 3வது அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் கார்!

By Saravana

இந்தியாவில் மேலும் ஒரு புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் கார் சாலையில் தடம் பதித்துள்ளது. மங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இந்த காரை சமீபத்தில் வாங்கியிருக்கிறார்.

அந்த மஞ்சள் வண்ண அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் கார் தற்போது மங்களூர் நகரை கலக்கி வருகிறது. படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 உரிமையாளர்

உரிமையாளர்

மங்களூரை சேர்ந்த தொழிலதிபரான அர்ஜுன் மோரேஸ் என்பவர்தான் இந்த காரை வாங்கியிருக்கிறார். மிகவும் பிரத்யேகமான இந்த காரை முன்பதிவு செய்து, சமீபத்தில் டெலிவிரி பெற்றிருக்கிறார்.

விலை

விலை

ரூ.4.5 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலை கொண்டது அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் கார். ஆன்ரோடு விலை ரூ.6 கோடியை நெருங்குகிறது.

 3வது கார்

3வது கார்

சென்னையிலும், குஜராத் மாநிலம் சூரத்திலும் ஏற்கனவே அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் கார்கள் உள்ளன. இதைத்தொடர்ந்து, இந்தியாவின் மூன்றாவது அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் கார் என்ற பெருமையை இந்த கார் பெறுகிறது.

வாங்கிஷ் அறிமுகம்

வாங்கிஷ் அறிமுகம்

கடந்த 2001ம் ஆண்டு அஸ்டன் மார்ட்டின் விராஜ் வரிசை கார்களுக்கு மாற்றாக புதிய தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை இயன் கல்லம் வடிவமைத்தார்.

டிசி டிசைன் நிறுவனத்தின் பங்கு

டிசி டிசைன் நிறுவனத்தின் பங்கு

இந்த காரின் புரோட்டோடைப் மாடலை உருவாக்கியதில், இந்தியாவின் டிசி டிசைன் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல கார் வடிவமைப்பாளருமான திலீப் சாப்ரியாவுக்கும், ஃபோர்டு மோட்டார் கம்பெனிக்கும் முக்கிய பங்கு உண்டு.

ஜேம்ஸ்பாண்ட் கார்

ஜேம்ஸ்பாண்ட் கார்

'டை அனதர் டே' என்ற ஜேம்ஸ்பாண்ட் வரிசை படத்தில் இந்த கார் ஜேம்ஸ்பாண்ட் ஹீரோவின் ஆஸ்தான மாடலாக பயன்படுத்தப்பட்டது.

மீண்டும் பழைய பெயர்

மீண்டும் பழைய பெயர்

2007ம் ஆண்டு வாங்கிஷ் காருக்கு மாற்றாக டிபிஎஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், 2012ல் டிபிஎஸ் காருக்கு மாற்றாக வாங்கிஷ் பிராண்டு பெயர் பயன்படுத்தப்பட்டது. இது கிராண்ட் டூரர் வகையை சேர்ந்த கார் மாடல்.

எஞ்சின்

எஞ்சின்

அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் காரில் 5,953சிசி வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 568 பிஎச்பி பவரையும், 630 என்எம் டார்க்கையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. மங்களூர் சாலைகளை இந்த கார் ஒரு கை பார்க்கும் எனலாம்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் கார் அதிகபட்சமாக 317 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. 0- 96 கிமீ வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் தொட்டுவிடும்.

மற்றொரு கார்

மற்றொரு கார்

அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் காரை வாங்கியிருக்கும் தொழிலதிபர் அர்ஜுன் மோரேஸிடம், ஏற்கனவே ஆடி ஆர்8 வி10 கார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, April 22, 2016, 10:05 [IST]
English summary
India has just received its third Aston Martin Vanquish, this time in an eye-catching sunburst yellow.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+