2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை 100% எலக்ட்ரிக் வாகனங்கள் கொண்ட நாடாக மாற்ற முயற்சி

By Ravichandran

2030-ஆம் ஆண்டிற்குள் 100% எலக்ட்ரிக் வாகனங்கள் கொண்ட நாடாக மாற, இந்திய அரசு முயற்சித்து வருகிறது.

இதற்காக, இவி அல்லது எலக்ட்ரிக் வாகனங்கள் என்று அழைக்கபடும் இவற்றை வழங்க, ஸீரோ (0) டவுன் பேமண்ட் தேர்வுகளில் வழங்கும் வகையிலான திட்டங்களை அரசு அறிமுகம் செய்யலாம்.

2030-ஆம் ஆண்டை இலக்கு ஆண்டாக கொண்டு, அதற்குள் இந்தியாவை 100% எலக்ட்ரிக் வாகனங்களை கொண்ட நாடாக மாற்ற இந்திய அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது.

மின்சார துறையில் செய்தது போல், துறைகள் ரீதியாக சிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட வர முடிந்தால், அதிகமான மாசு ஏற்படுத்தும் மற்றும் திறனற்ற தொழில் நுட்பங்களை நிராகரித்து விடலாம் என மின்சார துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

india-to-become-100-percent-electric-cars-equipped-by-2030

அரசின் இந்த முயற்சிகளை, ஆட்டோமொபைல் துறையினார் வெகுவாக வரவேற்கின்றனர். சியாம் அல்லது சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுஃபேக்சரர்ஸ் சங்கத்தின் உயர் அதிகாரி விஷ்னு மாதுர், அரசின் நடவடிக்கைகளை பாராட்டினார். மேலும், இது சிறந்த யோசனை ஆகும். மேலும் நடைமுறைபடுத்த கூடிய யோசனை ஆகும் என்றார். மாசு உமிழ்வு அதிகரிப்பை குறைத்து, எலக்ட்ரிக் அல்லது ஹைப்ரிட் வாகனங்களின் பிரயோகத்தை நூதன
யோசனைகளுடம் அதிகரிப்பதற்கு நாங்களும் அரசுடன் இணைந்து சேவை செய்ய காத்திருக்கிறோம் என விஷ்னு மாதுர் தெரிவித்தார்.

உலக அளவில்,இந்திய ஆட்டோமொபைல் துறை தான் 6-வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் துறையாக உள்ளது. உலக அளவில், மொத்தம் உள்ள ஆட்டோமொபைல் உற்பத்தியில், 22% இந்தியாவில் இருந்து தான் வெளியாகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 28, 2016, 18:43 [IST]
English summary
India Aims to become 100 Percent Electric Vehicles equipped Nation By 2030. Government may introduce special schemes to provide Electric Vehicles (EV) at zero down-payment. India's automobile industry is sixth largest in world. India alone accounts for 22% of world's total manufacturing output. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+