2020-க்குள் இந்தியா நேரடியாக யூரோ VI எரிபொருள் தரத்தை ஏற்கும் - தர்மேந்திர பிரதான்

Written By:

இந்தியா நேரடியாக யூரோ VI எரிபொருள் தரத்தை ஏற்று கொள்ள உள்ளதாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

வாகனங்களுக்கு உபயோகிக்கபடும் எரிவாயுகள், அதன் தரத்திற்கு ஏற்ப வகைபடுத்தபடுகிறது. இதில் பல்வேறு வகைபாடுகள் உள்ளது. இந்திய அளவிலும் இத்தகைய வகைபாடுகள் உள்ளன.

தற்போது கிடைக்கும் எரிபொருள் யூரோ IV (பாரத் ஸ்டேஜ் IV) தரத்தில் உள்ளது. யூரோ IV (பாரத் ஸ்டேஜ் IV) தரத்தில் இருந்து நேரடியாக யூரோ VI (பாரத் ஸ்டேஜ் VI) தர எரிபொருளை 2020-ஆம் ஆண்டுக்குள் ஏற்க உள்ளதாக அறிவித்தார்.

india-to-upgrade-to-euro-vi-fuel-standards-2020-april

பாரத் ஸ்டேஜ்-V (யூரோ-V) பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் தரங்களுக்கும், பாரத் ஸ்டேஜ் VI (யூரோ VI) எரிபொருள் தரங்களுக்கும், அதிக அளவிலான வித்தியாசங்கள் இல்லை. இதனால், பாரத் ஸ்டேஜ் VI (பிஎஸ் VI) தரத்தில் ஆன எரிபொருள், 2020-ஆம் ஆண்டிற்குள் கொண்டு வரப்படும் என அமைச்சர் கூறினார்.

பாரத் ஸ்டேஜ் IV எரிபொருளில், ஒரு மில்லியனில் (பிபிஎம்-ல்) 50 பாகங்கள் சல்ஃபர் உள்ளது. ஆனால், பாரத் ஸ்டேஜ் V மற்றும் பாரத் ஸ்டேஜ் VI எரிபொருளில், ஒரு மில்லியனில் (பிபிஎம்-ல்) 10 பாகங்கள் சல்ஃபர் மட்டுமே உள்ளது.

2020-ற்குள், பாரத் ஸ்டேஜ் IV தரத்திலான பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளுக்கு மேம்படுத்தி கொள்ள, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் 80,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டி இருக்கும் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

English summary
Oil Minister Dharmendra Pradhan said that, India is plannig to adopt and change directly to Euro VI Fuel standards. He said that, "We are not going for Bharat Stage-V (or Euro-V) petrol and diesel as there is no big differences between BS-V and BS-VI (Euro-VI) fuel. Hence, We will bring BS-VI fuel by 2020."
Story first published: Friday, January 1, 2016, 18:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark