கார்களுக்கு ஸ்டார் ரேட்டிங்: 7 புதிய சோதனை மையங்களை திறக்க முடிவு!

By Meena

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து தர மதிப்பீடு வழங்குவதற்காக, உலகத் தரம் வாய்ந்த 7 புதிய கார் சோதனை மையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு இந்த புதிய சோதனை மையங்கள் திறக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, பெங்களூர், மானேசர் ரேபரேலி, சில்சார், இந்தூர் மற்றும் புனே ஆகிய இடங்களில் இந்த கார் சோதனை மையங்கள் நிறுவப்பட உள்ளன. இந்த சோதனை மையங்கள் ரூ.3,700 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

சோதனை மையம்


கார்களின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நட்சத்திர தர மதிப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது கார்களின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு கட்டுமானத்தை ஆய்வு செய்வதற்கான கிராஷ் டெஸ்ட்டும் நடத்தப்படும்.

இதுதவிர, ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வேக எச்சரிக்கை வசதி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் கணக்கில் கொள்ளப்படும். அதுமட்டுமில்லை, இந்த பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெற்று இருந்தால்தான் அதிகபட்சமான 5 நட்சத்திர தர மதிப்பீடு வழங்கப்படும்.

அதேபோன்று, 100 கிமீ செல்வதற்கு கார்கள் எத்தனை லிட்டர் எரிபொருளை எடுத்துக் கொள்கின்றன என்பதை அடிப்படையாக வைத்தும், இந்த சோதனை நடத்தப்படும். இதன் அடிப்படையில் கார்களுக்கு நட்சத்திர தர மதிப்பீடு வழங்கப்படும். இதன்மூலமாக, கார்களின் உண்மையான பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து வாடிக்கையாளரகள் எளிதில் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 31, 2016, 10:51 [IST]
English summary
India Will Get Seven Vehicle Testing Centres By 2017; Safety Gets Priority.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+