ஆய்வுகளுக்காக ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவி இந்தியாவில் இறக்குமதி!

By Meena

கார்களின் மன்னனாக விளங்கும் ஜாகுவார் மாடல்கள், இந்தியாவில் தனது விற்பனையை மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இந்திய மார்க்கெட், ஜாகுவாருக்கு கணிசமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏரியா.

ஏற்கெனவே பல மாடல் கார்களை இங்கு ஜாகுவார் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தாலும், ஸ்போர்ட் யுடிலிட்டி வெய்க்கிள் எனப்படும் எஸ்யூவி ரக கார்கள் எதுவும் இந்தியாவுக்கு வரவில்லை.

ஜாகுவார் எஃப் பேஸ்

அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக இந்தியாவில் எஃப் - பேஸ் எஸ்யூவி மாடலை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த ஜாகுவார் திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மோட்டார் ஷோவில் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு ஹிட்டானது.

தற்போது அதை விற்பனை செய்வதற்கான சட்ட அனுமதிகளைப் பெற எஃப்-பேஸ் கார் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த மாடல் காரில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. 2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட அந்தக் காரில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

177.5 பிஎச்பி மற்றும் 430 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட எஞ்சின் அது. 6 கியர் மேனுவல் ஆப்ஷனும், 8 கியர் ஆட்டோமேடிக் ஆப்ஷனும் கொண்டுள்ளது.

காரை எடுத்தவுடன் 100 கிலோ மீட்டர் வேகத்தை 8.7 விநாடிகளில் எட்டிவிடும் திறன் உடைய எஞ்சின் இது. அதிகபட்ச வேகம் மணிக்கு 208 கிலோ மீட்டராகும். இதே வசதி பின்புற வீல் டிரைவ் ஆப்ஷனிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதி்ல் 100 கிலோ மீடடர் வேகத்தைத் தொடுவதற்கு கூடுதலாக 0.2 விநாடிகள் ஆகும்.

இதைத் தவிர 3 லிட்டர் திறன் கொண்ட வி6 டர்போ சார்ஜுடு எஞ்சின் மாடல் ஆப்ஷனும் எஃப்-பேசில் உள்ளது. அந்த மாடல் எஞ்சின் 269 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.2 விநாடிகளில் எட்டிவிடும். சாலைக்கும், காரின் அடித்தளத்துக்கும் இடேயான இடைவெளி, அதாவது கிரவுண்ட் கிளியரன்ஸ் 213 மில்லி மீட்டராக உள்ளது.

4,731 மி.மீ நீளமும், 1,936 மி.மீ அகலமும், 1,652 மி.மீ உயரமும் கொண்டது ஜாகுவார் எஃப்-பேஸ் கார். இப்போதே அந்த மாடலுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால், அறிமுகமான சில நாள்களிலேயே கெத்து காட்ட போகிறது அந்த கார் என்பதில் மாற்றமில்லை.

Most Read Articles
English summary
Jaguar F-Pace SUV Imported Into India; Launch Imminent?.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X