ஜீப் பிராண்ட்டின் ரேங்லர் ட்ரெய்ல்கேட் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

Written By:

ஜீப் பிராண்ட், ரேங்லர் ட்ரெய்ல்கேட் கான்செப்ட் எஸ்யூவி என்ற வாகனத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

ரேங்லர் ட்ரெய்ல் கான்செப்ட் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

75-வது பிறந்தநாள்;

75-வது பிறந்தநாள்;

ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (FCA) நிறுவனத்திற்கு சொந்தமான ஜீப் பிராண்ட், 50-வது வருடாந்திர ஈஸ்டர் ஜீப் ஸஃபாரி மற்றும் அந்நிறுவனத்தின் 75-பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, 7 புதிய கான்செப்ட் வாகனங்களை அறிமுகம் செய்தனர்.

இந்த ஹெல்கேட் பவர் கூட்டபட்ட ரேங்லர் ட்ரெய்ல்கேட் கான்செப்ட் எஸ்யூவியும், இந்த 7 வாகனங்களில் ஒன்றாகும்.

டிசைன்;

டிசைன்;

ரேங்லர் ட்ரெய்ல்கேட் கான்செப்ட் எஸ்யூவி, ஜீப் ரேங்லர் வாகனத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

இதற்கு ஆக்ரோஷமான தோற்றம் அளிப்பதற்காக, இதன் வெளிப்புற தோற்றத்திற்கு சில மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

நேர்த்தியான தோற்றம் வழங்குவதற்காக, இதன் விண்ட்ஷீல்டின் அளவு 2 இஞ்ச் குறைக்கபட்டுள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

ரேங்லர் ட்ரெய்ல்கேட் கான்செப்ட் எஸ்யூவி, அதன் வெளிபுறத்தில் ஹெல்கேட் மற்றும் ட்ரெய்ல்கேட் ஆகிய இரண்டும் வாகனங்களின் டீகேல்களையும் கொண்டுள்ளது.

இதன் உட்புறத்தில், டாட்ஜ் வைப்பர் மாடலில் இருந்து பெறப்பட்ட பக்கெட் சீட்கள் பொருத்தபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ரேங்லர் ட்ரெய்ல்கேட் கான்செப்ட் எஸ்யூவி, 6.2 லிட்டர் ஹெச்இஎம்ஐ, வி8 இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 6,000 ஆர்பிஎம்களில் 707 பிஹெச்பியையும்,

4,000 ஆர்பிஎம்களில் 881 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இது டாட்ஜ் சேலஞ்ஜர் எஸ்ஆர்டி ஹெல்கேட் மாடலில் இருந்து பெறபட்டுள்ள அதே இஞ்ஜினை கொண்டுள்ளது.

இதன் 6.2 லிட்டர் வி8 இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ரேங்லர் ட்ரெய்ல்கேட் கான்செப்ட் எஸ்யூவி, முன்பகுதியிலும், பின் பகுதியிலும் ஸ்டீல் பம்பர்கள், டானா ஆக்ஸில்கள் மற்றும் ஃபாக்ஸ் ஷாக்ஸ் கொண்டுள்ளது.

வீல், டயர்;

வீல், டயர்;

ரேங்லர் ட்ரெய்ல்கேட் கான்செப்ட் எஸ்யூவி, 17-இஞ்ச் பீட்லாக் சக்கரங்கள் கொண்டுள்ளது. இவை, 39.5 இஞ்ச் அளவிலான பிஎஃப்-குட்ரிச் கிராளர் டயர்கள் கொண்டுள்ளது.

English summary
Jeep Brand owned by Fiat Chrysler Automobiles (FCA) has introduced unveiled the Wrangler Trailcat Concept SUV. Jeep released 7 new concept vehicles to celebrate 50th Annual Easter Jeep Safari and company's 75th birthday. Wrangler Trailcat Concept SUV has many special features. To know more about the Wrangler Trailcat Concept SUV, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark