கர்நாடகாவில் வெளிமாநில வாகனங்களை பாகுபடுத்தும் சட்டம் ரத்து

By Ravichandran

கர்நாடகா உயர் நீதிமன்றம், வெளிமாநில வாகனங்களை பாகுபடுத்தும் வகையில் இருந்த சாலை வரி சட்டத்தை (டிஸ்கிரிமினேட்டரி ரோட் டேக்ஸ் லா) ரத்து
செய்துள்ளது.

2014-ஆம் ஆண்டில், வெளிமாநில வாகனங்களை பாகுபடுத்தும் வகையில், கர்நாடகா மோட்டார் வெஹிகிள்ஸ் டேக்ஸேஷன் ஆக்ட் என்ற பெயரில், ஒரு சாலை வரி சட்டதிருத்தம் கொண்டுவரபட்டது.

இந்த சட்டதிருத்தத்தின் படி, கர்நாடகா மாநில பதிவு எண்கள் இல்லாத எந்த ஒரு 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களும், 30 நாட்களுக்கு மேல் கர்நாடகாவில் இருந்தால், லைஃப்டைம் டேக்ஸ் எனப்படும் ஆயுடகால வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டத்து.

இந்த பாதகமான சட்டத்தை எதிர்த்து, இதை அகற்ற கோரி டிரைவ் வித்அவுட் பார்டர்ஸ் என்ற முகநூல் குரூப் (ஃபேஸ்புக் குரூப்) கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இன்று இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று கொண்ட கர்நாடகா உயர் நீதிமன்றம், இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவு வழங்கியது.

karnataka-high-court-repeal-discriminatory-law-against-out-of-station-vehicles

இனிமேல், கர்நாடகா மாநில பதிவு எண்கள் இல்லாத, பிற மாநிலங்கள் மற்றும் மத்திய பிராந்தியங்களை சேர்ந்த எந்த ஒரு 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களும் ஒரு வருடம் வரை எந்த விதமான தடைகள் இல்லாமலும், கூடுதல் வரிகள் கட்டாமலும் தங்களின் வாகனங்களை இயக்கி கொள்ளலாம்.

அந்த ஒரு வருட காலத்திற்கு பின் தான், வாகனங்களின் பதிவு எண்களை மாற்றி கொண்டு, ஆயுட்கால வரியையும் செலுத்த நேரிடும்.

பிற மாநிலங்களில் பதிவு செய்த வாகனங்களை கொண்டவர்களுக்கு, இது நிச்சயம் மிகுந்த சந்தோஷத்தை வழங்கும் செய்தியாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 10, 2016, 18:39 [IST]
English summary
Karnataka High Court has repealed very Discriminatory Road Tax Law brought 2014 amendment to the Karnataka Motor Vehicles Taxation act. This Discriminatory Road Tax Law forced vehicles registered outside Karnataka to pay lifetime tax in the State, if the vehicle stayed in Karnataka beyond 30 days. Facebook group 'Drive Without Borders' filed a case and brought this change.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+