ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ், இந்தியாவில் பிரவேசம்
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின், துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியாவில் பிரவேசம் செய்ய உள்ளது.
கியா மோட்டார்ஸ் என்னும் துணை நிறுவனம், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது.
இந்திய வாகன சந்தை, உலகின் 3-வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறும் கட்டத்தை நெருங்கி வருகிறது. கியா மோட்டார்ஸ், கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 3 மில்லியன் வாகனங்களை விற்றுள்ளது. கொஞ்ச காலமாகவே இந்தியா வாகன சந்தையில் ஆர்வம் காட்டி வருகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக நிலம் கையகபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும், இந்திய சந்தைகள் குறித்து, விரிவான செயலாக்க ஆய்வு உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகளை தயாரித்துள்ளது என கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தனிபட்ட ஆலையின் கட்டுமான பணிகள் முடுவடைந்த பின், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மாடல்கள் கூட இங்கு தயாரிக்கபடலாம் என கூறப்படுகிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம்,ரீடெயில் சந்தைகளில் தங்களின் தயாரிப்புகளை நெட்வர்க் மூலம் விற்பது போன்றே, கியா மோட்டார்ஸ் நிறுவனமும் தங்களின் தயாரிப்புகளை தங்களின் தனிப்பட்ட நெட்வர்க் மூலம் விற்பனை செய்ய உள்ளது.
இதனால், ஆட்டோமொபைல் சந்தைகளில் ஆரோக்கியமான போட்டி உருவாக உள்ளது.


Click it and Unblock the Notifications








