ரேஸுக்கு நாங்க ரெடி.... லம்போகினி சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் டிரைவில் கலக்கிய பெண்கள்...

By Meena

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;

எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி! ....

இந்தப் பாடல் எழுதி குறைந்தது 90 ஆண்டுகள் இருக்கும். ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பதை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உரக்கக் கூறி விட்டுச் சென்று விட்டான் மகாகவி.

லம்போர்கினி கார்

அவன் வாக்கு, இன்று இம்மியளவும் பிறழாமல் நடந்து கொண்டே இருக்கிறது. சேவையில் தெரசா, விஞ்ஞானத்தில் மேரி-கியூரி, புலமையில் சரோஜினி நாயுடு, தொழில்நுட்ப அறிவியலில் கல்பனா சாவ்லா, ஆளுமையில் இந்திரா காந்தி என அத்தனைத் துறைகளிலும் பெண்கள் அடித்து நொறுக்கி சாதனை படைத்துள்ளனர்.

விளையாட்டுகளிலும், வீரச் செயல்களிலும் ஆண்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று தடைக்கற்களை உடைத்தெறிந்து அவற்றிலும் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர் பெண்கள்.

அதேவேளையில், ஒரு சில விளையாட்டுகளில் இன்னும் பெண்களால் தடம் பதிக்க முடியவில்லை என்பதே கசப்பானதொரு உண்மை.

உதாரணமாக மோட்டார் சைக்கிள், கார் ரேஸ்களில் பெண்களின் பங்களிப்பு சற்றுக் குறைவாகவே உள்ளது. சாலையில் பெண்கள் கார்களையும், பைக்குகளையும் ஓட்டிச் செல்வதைப் பார்க்கிறோம். ஆனால், அந்த ஆர்வம் அடுத்தகட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

அப்படி ஓர் உத்வேகத்தைத் தரும் வகையிலான ஒரு முயற்சியை லம்போகினி நிறுவனம் நிகழ்த்திக் காட்டியுள்ளது.

லம்போகினி சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் டிரைவ் என்ற பெயரில் பெண்களுக்கான கார் டிரைவ் நிகழ்ச்சியை தில்லியில் அண்மையில் நடத்தியது அந்நிறுவனம். இந்த நிகழ்ச்சியை ஷீத்தல் துகர் என்ற பெண் வழிநடத்தியுள்ளார்.

அவர் ஏற்கெனவே கொல்கத்தாவில் நடைபெற்ற கிளப் ஜிடி ரேஸில் வெற்றிவாகை சூடியவர். அவருடன் 8 பெண்கள் இந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் டிரைவிங்கில் பங்கேற்றனர்.

புத் இன்டர்நேஷனல் சர்க்கியூட் என்ற ரேஸ் பாதையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மொத்தமாக 45 கிலோ மீட்டர்களுக்கு அவர்கள் பயணித்துள்ளனர். அதன் பிறகு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், இதில் பங்கேற்றதற்காக பெருமை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியை, லம்போகினி இந்தியா ரேஸ் ரைடர் ஆர்மன் இப்ராஹிம், லம்போகினி இந்தியா நிறுவனத் தலைவர் சரத் அகர்வால் ஆகியோர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர்.

இத்தகைய முயற்சிகள், அடுத்து ஃபார்முலா ஒன் பந்தயங்களிலும் பெண்களின் சாதனையைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையை துளிர்விடச் செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 11, 2016, 15:58 [IST]
English summary
Lamborghini Hosts First Super Sports Car Drive For Women.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+