செம லுக்... செக்ஸி ரெமோ..... லம்போகினி அவென்டேடார் சூப்பர் கார் அறிமுகம்
சென்ட்ரலைஸ்டு ஏ.சி பொருத்தப்பட்ட படு பிரம்மாண்டமான கண்ணாடி மாளிகைக்குள் மென்மையான இளவம்பஞ்சு மெத்தையை விரி்த்து, அதன் மேல் மயில் இறகுகளைப் பரப்பிப் படுத்தால் எவ்வளவு பரிபூர்ணமான உணர்வு மேலிடும்?
அதைப் போன்றதொரு சொகுசு நிலையை ஒரு சில கார்களில் பயணிக்கும்போதும் உணரலாம். வாடிக்கையாளர்களின் கம்ஃபோர்ட் மட்டுமே அந்த மாடல் கார்களில் பிரதானமாக இருக்கும்.

அப்படியான ஒரு மெஜஸ்டிக் மாடல் கார் லம்போகினி. அந்த நிறுவனத்தின் காரை வைத்திருந்தாலே, சமூகத்தில் நீங்கள் கவனிக்கத்தக்க நபராக மாறிவிடுவீர்கள். அத்தகைய பெருமைக்குரிய லம்போகினி நிறுவனம், தனது மியூரா மாடலை அறிமுகப்படுத்தி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கான பொன் விழாவை அண்மையில் கொண்டாடியது.
குட்வுட் திருவிழாவின் ஒரு பகுதியாக அந்த நிகழ்ச்சியாக அது நடைபெற்றது. அதில் சிறப்பம்சமாக அவென்டேடார் மியூராவின் சிறப்பு எடிசன் சூப்பர் கார் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது.
இது சிறப்பு மாடல் என்பதால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கார்களே தயாரிக்கப்படவுள்ளன. அதுவும் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளன.
இந்த சிறப்பு மாடலை லம்போகினியின் ஏடி பெர்சோனம் டிவிசன் வடிவமைத்துள்ளது. செம க்ளாஸாகவும், பக்கா ஸ்டைலாகவும் பார்க்க படு கியூட்டாகக் காட்சி தரும் ரெமோ கார் இது.
வழக்கமான அவென்டேடார் மாடலைப் போல அல்லாமல் சிறப்பு எடிசனில் வெளிப்புற பெயிண்டிங் வித்தியாசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மேல் புறத்தில் டார்க் டோனும், கீழே வர வர சற்று லைட்டான டோனும் பெயிண்ட்டிங் செய்திருப்பது இதன் மற்றொரு சிறப்பு.
மியூரா மாடல் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. ஆனால், இந்த சிறப்பு எடிசனைப் பொருத்தவரை மூன்று கலர்களில் மட்டுமே காட்சியளிக்கிறது. 20 - 21 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. அதன் ரிம்கள் தங்க முலாம் அல்லது வெள்ளி நிறத்தில் இருப்பது செம அட்ராக்ஷனான அம்சம்.
பின்புறத்தில் பிரஸ்டீஜான லம்போகினி லோகோ கருப்பு நிறத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதைத் தவிர மியூரா பேட்ஜும் ஒட்டப்பட்டுள்ளது. இவை இரண்டுமே ரிச்சான லுக்கைத் தருகின்றன.
சூப்பர் காரின் உள்புறத்தை எடுத்துக் கொண்டால், இன்டீரியருக்கு நீரோ ஏட் அல்லது டெர்ரா எமிலா ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு வகை லெதர் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
மொத்தத்தில் இந்த லம்போகினி எவேன்டேடர் மியூரா சூப்பர் கார், சாலையில் போவோர் அனைவரையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கப்போகிறது என்பது உறுதி.


Click it and Unblock the Notifications


















