நவீன யுக 'டிராம்': சீன நிறுவனத்தின் அசத்தல் பஸ் கான்செப்ட்!

Written By:

கொல்கத்தாவில் பயன்பாட்டில் இருக்கும் டிராம் ரயில் போன்ற அமைப்புடைய நவீன யுக தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த புதிய பஸ் கான்செப்ட் ஒன்றை சீன பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் அங்கு நடந்த தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த பஸ் கான்செப்ட் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த பஸ் போக்குவரத்து நெரிசல் மிக்க நகர்ப்புறங்களுக்கு மிகச்சிறந்ததாக அமையும் என்று வடிவமைத்த பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த இந்த பஸ் கான்செப்ட் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

லேண்ட் ஏர்பஸ்

லேண்ட் ஏர்பஸ்

சீனாவை சேர்ந்த டிரான்ஸ்போர்ட் எக்ஸ்ப்ளோர் பஸ் என்ற நிறுவனம்தான் இந்த பஸ் கான்செப்ட்டை அறிமுகம் செய்துள்ளது. லேண்ட் ஏர்பஸ் என்று இந்த பஸ் கான்செப்ட்டை அழைக்கின்றனர். இதர வாகனங்களுக்கு இடையூறு தராத வகையில், சாலையின் அகலத்துக்கு இணையான அகலத்துடன், சாலையின் இருமருங்கிலும் அமைக்கப்பட்ட தடத்தில் இந்த பஸ் செல்கிறது.

மாடி பஸ்

மாடி பஸ்

பஸ்சின் கீழ் பகுதியில் கார் உள்ளிட்ட வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு வசதியான இடைவெளியுடன் இருக்கை தளம் மேலே உயர்த்தி அமைக்கப்பட்டு இருக்கிறது. மாடி பஸ் போல மேல்புறத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருந்தாலும், இந்த பஸ் செல்வதற்கு தடை ஏதும் இருக்காது. எனவே, குறித்த நேரத்தில் இயக்க முடியும். இந்த பஸ்சிற்காக அமைக்கப்பட்ட தடம் கூட சாலைகளில் தடையாக இருக்காது.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

ஒரேநேரத்தில் ஒரு பெட்டியில் 300 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 1,400 பயணிகள் வரை செல்ல முடியும். எனவே, எதிர்கால போக்குவரத்து தேவையை சமாளிக்க இந்த பஸ் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேகம்

வேகம்

இந்த பஸ் மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லும். வளைவுகளில் கூட வேகத்தை அதிகமாக குறைக்க வேண்டிய அவசியம் இருக்காது. மிக பாதுகாப்பான பயணத்தை வழங்கும்.

லிஃப்ட் வசதி

லிஃப்ட் வசதி

பயணிகள் மேலே ஏறி, இறங்குவதற்கு லிஃப்ட் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். இதனால், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் கூட எளிதாக பஸ்சில் ஏறி, இறங்க முடியும். அப்போது பின்னால் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான தடுப்பும் தானியங்கி முறையில் செயல்படும்.

 அவசரகால வழி

அவசரகால வழி

விமானம் போன்றே இந்த பஸ்சிலிருந்து கீழே இறங்குவதற்கு பக்கவாட்டிலும், பஸ்சின் நடுவிலிருந்து கீழே இறங்குவதற்கு அவசரகால வழிகள் மற்றும் அதற்கான மேடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்கள் மீது மோதும் நிலை ஏற்பட்டால், தானியங்கி பிரேக் மூலமாக இந்த பஸ் நின்றுவிடும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இதற்காக தனி சாலைகள் அமைக்க தேவையில்லை. மேலும், சாலையில் தடம் அமைக்கும்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாது. இந்த பஸ் 60 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலத்தையும், 4.5 மீட்டர் உயர இடைவெளியை கொண்டிருக்கும். சாதாரண பஸ்களை போன்று சாலையில் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தாது.

உற்பத்தி

உற்பத்தி

தெற்கு சீனாவில் தற்போது இந்த பஸ்சை அசெம்பிள் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

 சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

வரும் ஆகஸ்ட் மாதத்தில் இதன் முழுமையான பஸ் மாடலை சோதனை ஓட்டம் நடத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறது.

 சிறந்த சாதனம்

சிறந்த சாதனம்

மெட்ரோ ரயில், சாதாரண பஸ்களைவிட இது மிகச்சிறந்த போக்குவரத்து சாதனமாக இருக்கும் என்று இதனை வடிவமைத்தவர்கள் கூறுகின்றனர். ஒரே நேரத்தில் அதிக பயணிகளை குறித்த நேரத்தில் கொண்டு சேர்க்க வரப்பிரசாதமாக அமையும் என்று தெரிவிக்கின்றனர்.

 
English summary
Land Airbus could be future of transportation.
Story first published: Thursday, May 26, 2016, 12:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark