எலக்ட்ரிக் வாகனங்களுக்கு எந்த வரிகளும் கிடையாது - மஹாராஷ்டிர அரசு

Written By:

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாக மஹாராஷ்டிர மாநில அரசு என அறிவித்துள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களை நடைமுறைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் மஹாராஷ்டிர மாநில அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், மத்திய அரசு செயல்படுத்தும் ஃபேம் (ஃபாஸ்டர் அடாப்ஷன் அண்ட் மேனுஃபேக்சர் ஆஃப் எலக்ட்ரிக் வெஹிகிள்ஸ் ஸ்கீம்) திட்டமும், பசுமையான மற்றும் சுத்தமான வாகனங்களுக்கான விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில், இத்தகைய வாகனங்களுக்கு வரி விதிப்பதில்லை என்று மஹாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மஹாராஷ்டிராவில் வாங்கபடும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வாட் (வேல்யூ ஆடட் டேக்ஸ் டேக்ஸ்), ரெஜிஸ்டிரேஷன் டேக்ஸ் (பதிவு வரி), ரோட் டேக்ஸ் (சாலை வரி) உள்ளிட்ட எந்த வரிகளும் விதிக்கபடாது.

மஹாராஷ்டிராவில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வரி விதிக்க போவதில்லை என்ற அறிவிப்பை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார். இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, வாடிக்கையாளர்கள் அதிக அளவில் எலக்ட்ரிக் வாகனங்களை ஃப்வாங்கி கொள்ளலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனமாக மஹிந்திரா நிறுவனம் மட்டுமே விளங்குகிறது. மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் ஈ2ஓ காரின், டி2 பிரிமியம் வேரியண்ட் 4.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் விற்கபடுகிறது.

maharashtra-government-electric-vehicles-no-taxes

இந்த விலை, ஃபேம் ஸ்கீம் மூலம் கிடைக்கும் ஊக்கதொகையையும் உள்ளடக்கியுள்ளது. வரிகள் இல்லாத இந்த விலையில், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது சிறந்த டீல் ஆகும்.

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா, தங்களின் எலக்ட்ரிக் வாகனங்களின் பட்டியலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மஹிந்திரா நிறுவனம் சார்பாக, மேலும் ஒரு புதிய எலக்ட்ரிக் செடானும், எல்சிவி மாடலும் விரையில் அறிமுகம் செய்யபட உள்ளது.

டெல்லியில் சமீபத்தில் நடைமுறைபடுத்தபட்டுள்ள ஆட் / ஈவன் வாகன சட்டத்திற்கு பின்பு, எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிக அளவில் உயர வாய்ப்புகள் உள்ளது.

English summary
Maharashtra Government has decided not to impose any taxes on Electric Vehicles. The Central Government scheme named FAME (Faster Adoption & Manufacture of Electric vehicles) also would boost sales of cleaner and greener vehicles. Taxes like Value Added Tax, Registration Tax, and Road Tax are not applicable for electric vehicles.
Story first published: Monday, January 4, 2016, 16:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark