மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், ஜூன் 2-ல் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், ஜூன் 2-ஆம் தேதி (நாளை) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

மஹிந்திரா இ-வெரிட்டோ குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா இ-வெரிட்டோ...

மஹிந்திரா இ-வெரிட்டோ...

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், இந்திய வாகன சந்தைகளுக்கு என பல்வேறு எலக்ட்ரிக் வாகங்களை அறிமுகம் செய்யும் நோக்கில், டீஸ் செய்து வருகின்றனர்.

அதில், மஹிந்திரா இ-வெரிட்டோ மிக முக்கியமான மாடலாக உள்ளது. இந்த மஹிந்திரா இ-வெரிட்டோ, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிபடுத்தப்பட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், 72V எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது.

இந்த எலக்ட்ரிக் மோட்டார், 40.44 பிஹெச்பியையும், 91 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ரேஞ்ச்;

ரேஞ்ச்;

இந்திய ஆட்டோமொபைல் ஜாம்பவானான மஹிந்திரா, இந்த இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானை ஒரு முறை முழு கொள்ளளவுக்கு சார்ஜ் செய்தால், 100 கிலோமீட்டர் வரை செல்லும் வகையிலான ரேஞ்ச் கொண்டுள்ளது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், டி2, டி4 மற்றும் டி6 என மொத்தம் 3 வேரியன்ட் தேர்வுகளில் கிடைக்கிறது.

இதில், டி2 என்பது அடிப்படை வேரியன்ட்டாகவும், டி4 என்பது நடுத்தர வேரியன்ட்டாகவும், டி6 என்பது டாப்-என்ட் வேரியன்ட்டாகவும் உள்ளது.

சார்ஜிங்;

சார்ஜிங்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின் 3 வேரியன்ட் தேர்வுகளில், டாப்-என்ட் வேரியன்ட்டான டி6 மட்டுமே க்விக் சார்ஜிங் தேர்வுடன் கிடைக்கிறது.

இப்படியாக, க்விக் சார்ஜிங் வசதி கொண்ட டாப்-என்ட் வேரியன்ட்டான டி6 மாடலை சார்ஜ் செய்ய 6 1/2 மணி நேரம் ஆகிறது.

டி2 மற்றும் டி4 வேரியன்ட்களை முழுமையாக சார்ஜ் செய்ய 8 மணி நேரம் ஆகும்.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொறுத்த வரை, மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், தற்போது வழங்கபட்டு வரும் வெரிட்டோ செடானை போலவே காட்சி அளிக்கிறது.

இ-வெரிட்டோ பேட்ஜ் தவிர, குறிப்பிடக்கூடிய வகையில் எந்த விதமான பெரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின் எலக்ட்ரிக் மோட்டாருடன் ஒத்திருக்கும் வகையில், இதன் எடை குறைக்கப்பட்டிருக்கும்.

இ-வெரிட்டோ எலக்ட்ரிக் வாகனமாக இருப்பதால், ஃபேம் எனப்படும் ஃபாஸ்டர் அடாப்டேஷன் அன்ட் மேனுஃபேக்சரிங் ஆஃப் வெஹிக்கிள்ஸ் (Faster Adoption & Manufacturing of Electric vehicles (FAME) Scheme) ஸ்கீம் மூலம் கிடைக்கும் ஆதாயம் கிடைக்கும்.

விலை;

விலை;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், 6.5 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலையில் இருந்து விற்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக் கார்: 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக் கார் பிப்ரவரியில் அறிமுகமாகிறது

வெரிட்டோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Mahindra & Mahindra is launching their Mahindra e-Verito Electric Sedan launching in India on June 2. Mahindra e-Verito will be available in 3 variant options, namely - Base variant is D2, while mid-variant is D4, and top-most trim is D6. Mahindra e-Verito Electric Sedan will have a range of 100 kilometres on a full charge. To know more about Mahindra e-Verito, check here...
Story first published: Wednesday, June 1, 2016, 15:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X