மஹிந்திரா இம்பீரியோ பிக்கப் டிரக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!

By Ravichandran

இம்பீரியோ பிக்அப் என்ற புதிய வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது.

மஹிந்திரா நிறுவனம் சார்பாக உற்பத்தி செய்யபடும் இந்த புதிய வாகனம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மஹிந்திரா இம்பீரியோ பிக்அப் பற்றி...

மஹிந்திரா இம்பீரியோ பிக்அப் பற்றி...

மஹிந்திரா இம்பீரியோ பிக்அப், சிங்கிள் கேபின் மற்றும் டபுள் (இரண்டு) கேபின் கட்டமைப்பில் கிடைக்கிறது.

மஹிந்திரா இம்பீரியோ பிக்அப் வாகனத்தின் புக்கிங், சுமார் ஒரு வார காலத்திற்கு முன்பே துவங்கிவிட்டது. இந்த மஹிந்திரா இம்பீரியோ பிக்அப், இந்திய சந்தைகளில் தற்போது கிடைக்கும் ஜீனியோ-வுக்கு மாற்றாக விளங்க உள்ளது.

வடிவமைப்பு, உற்பத்தி;

வடிவமைப்பு, உற்பத்தி;

இந்த மஹிந்திரா இம்பீரியோ பிக்அப், சென்னையில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேல்லியில் வடிவமைத்து, உருவாக்கபட்டுள்ளது.

எனினும், இவை பூனே அருகில் சகன் என்ற இடத்தில் உள்ள மஹிந்திரா உற்பத்தி ஆலையில் தான் உற்பத்தி செய்யபட உள்ளது.

இஞ்ஜின், கியர்பாக்ஸ்;

இஞ்ஜின், கியர்பாக்ஸ்;

மஹிந்திரா இம்பீரியோ பிக்அப், 2.5 லிட்டர், 4-சிலிண்டர்கள் கொண்ட டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 75 பிஹெச்பி-யையும், 220 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

மஹிந்திரா இம்பீரியோ பிக்அப்-பின் இஞ்ஜின், 1 லிட்டருக்கு 13.55 கிலோமீட்டர் என்ற அளவிலான மைலேஜை வழங்குகிறது.

எடை;

எடை;

புதிதாக அறிமுகம் செய்யபட்டுள்ள மஹிந்திரா இம்பீரியோ பிக்அப் 2,930 கிலோ எடை கொண்டுள்ளது. இதன் பேலோடு கெபாசிட்டி (சுமை கொள்திறன்) 1240 கிலோவாக உள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

மஹிந்திரா இம்பீரியோ பிக்அப், புதிய தலைமுறை ஹெட்லைட்டுகள், ஆக்கிரோஷமான பம்பர், 16-இஞ்ச் டையர்கள் உள்ளிட்ட வசதிகள் கொண்டுள்ளது.

மேலும், இதில் ஏர்கண்டிஷனிங், டில்டபிள் (சாய்க்க கூடிய) பவர் ஸ்டீயரிங் மற்றும் இஞ்ஜின் மொபலைஸர் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் வருகின்றது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

இந்தியாவில், மஹிந்திரா இம்பீரியோ பிக்அப் வாகனத்தின் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

சிங்கிள் கேபின்;

எஸ்சி (பிஎஸ் 3) - 6.25 லட்சம் ரூபாய்

எஸ்சி (பிஎஸ் 4) - 6.40 லட்சம் ரூபாய்

எஸ்சி விஎக்ஸ் (பிஎஸ் 3) - 6.60 லட்சம் ரூபாய்

எஸ்சி விஎக்ஸ் (பிஎஸ் 4) - 6.75 லட்சம் ரூபாய்

குறிப்பு ; அனைத்து பிஎஸ் 3 விலைகளும் எக்ஸ்-ஷோரூம் (தானே) விலைகளாகும்.

அனைத்து பிஎஸ் 4 விலைகளும் எக்ஸ்-ஷோரூம் (மும்பை) விலைகளாகும்.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

இந்தியாவில், மஹிந்திரா இம்பீரியோ பிக்அப் வாகனத்தின் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

டபுள் கேபின்;

டிசி (பிஎஸ் 3) - 6.60 லட்சம் ரூபாய்

டிசி (பிஎஸ் 4) - 6.75 லட்சம் ரூபாய்

டிசி விஎக்ஸ் (பிஎஸ் 3) - 7.12 லட்சம் ரூபாய்

டிசி விஎக்ஸ் (பிஎஸ் 4) - 7.27 லட்சம் ரூபாய்

குறிப்பு ; அனைத்து பிஎஸ் 3 விலைகளும் எக்ஸ்-ஷோரூம் (தானே) விலைகளாகும்.

அனைத்து பிஎஸ் 4 விலைகளும் எக்ஸ்-ஷோரூம் (மும்பை) விலைகளாகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 6, 2016, 19:03 [IST]
English summary
Mahindra has recently launched their Imperio Pickup. This Mahindra Imperio Pickup is available with single and double cabin configurations. Imperio pickup Bookings has begun almost a week ago. This Mahindra Imperio is expected to replace the Genio. Mahindra Imperio Pickup is launched in India for Rs. 6.25 Lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+