மஹிந்திரா கேயூவி100 காம்பேக்ட் எஸ்யூவி-க்கான காத்திருப்பு காலம் 2 மாதங்களாக உயர்வு...
மஹிந்திரா கேயூவி100 காருக்கான காத்திருப்பு காலம் 2 மாதங்களாக உயர்ந்துள்ளது.
மஹிந்திரா கேயூவி100-க்கான காத்திருப்பு காலம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா கேயூவி100 பற்றி...
மஹிந்திரா நிறுவனம் சார்பாக தயாரிக்கப்டும் மஹிந்திரா கேயூவி100, மிகுவும் எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றாக விளங்கியது.
ஒரு சில வாரங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யபட்ட, இந்த கேயூவி100, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இஞ்ஜின்;
இந்த மஹிந்திரா கேயூவி100, 1.2 லிட்டர், 3 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.
இந்த மஹிந்திரா கேயூவி100 காம்பேக்ட் எஸ்யூவி, முதல் முறை கார் வாங்குபவர்களை கவரும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கபட்டுள்ளது.

கூடியது காத்திருப்பு காலம்;
மஹிந்திரா கேயூவி100, ஜனவரி 15-ஆம் தேதி அறிமுகம் செய்யபட்டது.
மஹிந்திரா கேயூவி100-க்கு பெருகி வரும் டிமாண்ட் காரணமாக, 2 வாரங்களாக இருந்த காத்திருப்பு காலம், 15 நாட்களுக்குள் 2 வாரங்கள் என்ற அளவில் இருந்து 2 மாதங்களுக்கு உயர்ந்துள்ளது.

போட்டி கார்கள்;
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், டிசையர், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 உள்ளிட்ட அதிக அளவிலான ஹேட்ச்பேக்-கள் மற்றும் நுழைவு நிலை செடான்கள் உள்ளிட்ட செக்மண்ட்-டில் கடும் போட்டியை மஹிந்திரா நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.

அதிக வரவேற்பு பெற்ற மாடல்கள்;
மஹிந்திரா கேயூவி100-யின் கே6 மற்றும் கே8 வேரியண்ட்-களுக்கு கிடைத்த அதிக அளவிலான புக்கிங்-கள் படி, இந்த மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக தெரிகிறது.
அதிசயமாக, மஹிந்திரா மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த 3+3 சீட்டர் வேரியண்ட்-டிற்கு அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை என தெரிகிறது.

விலை?
மஹிந்திரா கேயூவி100 காம்பேக்ட் எஸ்யூவி-யின் பெட்ரோல் வேரியண்ட்களின் விலைகள் சுமார் 4.42 லட்சம் ரூபாய் முதல் 5.91 லட்சம் ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யபடுகிறது.
மஹிந்திரா கேயூவி100 காம்பேக்ட் எஸ்யூவி-யின் டீசல் வேரியண்ட்களின் விலைகள் சுமார் 5.22 லட்சம் ரூபாய் முதல் 6.76 லட்சம் ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவி - சிறப்புப் பார்வை
மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் புகைப்படத் தொகுப்பு!
மஹிந்திராவின் புதிய எஸ்யூவியின் பெயர் வெளியீடு... ஜனவரி 15ல் ரீலிசாகிறது!

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








