மஹிந்திரா கார்களுக்கான எம்-பிளஸ் சர்வீஸ் முகாம் இன்று துவங்கியது

By Ravichandran

மஹிந்திரா எஸ்யூவி மற்றும் கார்களுக்கான எம்-பிளஸ் சர்வீஸ் கேம்ப், மார்ச் 7 (திங்களன்று) துவங்கியது.

இன்று துவங்கிய இந்த சேவை முகாம், மார்ச் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சேவை முகாம், மஹிந்திரா நிறுவனத்தால் இந்தியா முழுவதும் நடை பெறுகிறது. மஹிந்திரா நிறுவனத்தால் தயாரிக்கபட்ட அனைத்து பயணியர் வாகனங்களை இந்த சேவை முகாமில் சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

மஹிந்திரா எம்-பிளஸ் சர்வீஸ் கேம்ப்பில், மஹிந்திரா கேயூவி100, மஹிந்திரா தார், மஹிந்திரா இ2ஓ, மஹிந்திரா வெரிட்டோ வைப் (சிஎஸ்), மஹிந்திரா பொலிரோ, மஹிந்திரா குவான்ட்டோ, மஹிந்திரா வெரிட்டோ, மஹிந்திரா டியூவி300, மஹிந்திரா ஸைலோ, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, மஹிந்திரா எக்ஸ்யூவி 500, மஹிந்திரா லோகன், மஹிந்திரா ரெக்ஸ்டன் ஆகிய மாடல்களின் சர்வீஸ் மேற்கொள்ளபடுகிறது. 450 மஹிந்திரா சர்வீஸ் செண்டர்கள் இந்த எம்-பிளஸ் சர்வீஸ் கேம்ப்பில் முழு வீச்சில் ஈடுபடுகின்றனர்.

mahindra-m-plus-service-camp-conducted-between-7th-march-to-12th-march

மஹிந்திரா எம்-பிளஸ் சர்வீஸ் கேம்ப்பின் போது, 75-விதமான விரிவான செக்-அப் நடத்தபடுகிறது. இந்த சேவை முகாம்களில் ஈடுபடும் அனைத்து டெக்னீஷியன்களும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. மஹிந்திரா எம்-பிளஸ் சர்வீஸ் கேம்ப்பில் சேவைகள் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கபடுவதோடு மட்டுமல்லாமல், லேபர் சார்ஜ்களில் எக்கசக்கமான சலுகைகள் வழங்கபடுகிறது.

தங்களின் கார்களுக்கான சேவைகளை பெற அப்பாயிண்ட்மண்ட் பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் 1800-209-6006 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இல்லையெனில், நேரடியாக சேவை முகாம்கள் நடக்கும் மையங்களுக்கு தங்கள் காரை கொண்டு சென்றும் சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

இதோடு மட்டுமல்லாமல், பல்வேறு சர்வீஸ் செண்டர்களில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் குறித்து கொள்ளபட்டு, அவர்களில் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யபட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கபடுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 7, 2016, 14:45 [IST]
English summary
Mahindra is organising a service camp named Mahindra M-Plus Service Camp from March 7, 2016 - March 12, 2016. This Service camp is organised in approximately 450 centres all across India. To fix appointments, customers can call on the Toll free Number - 1800-209-6006. Apart from this, there are lots of offers and Discounts.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+