ஆகஸ்ட் மாதத்தில் மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி மீது அட்டகாசமான சலுகைகள்
மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி மீது, இந்த ஆகஸ்ட் மாதத்தில் அட்டகாசமான சலுகைகள் வழங்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் வழங்கும் தயாரிப்புகளுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் சிறந்த வரவேற்பு உள்ளது.
பண்டிகை காலங்களை ஒட்டியும், வருடத்தின் சில காலங்களில், பல்வேறு நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மீது ஏராளமான தள்ளுபடிகளை வழங்குகின்றனர். அந்த வகையில், மஹிந்திரா நிறுவனமும் தங்களின் மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி மீது தள்ளுபடிகளை அள்ளி தருகிறது.
மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி மீது வழங்கப்படும் சலுகைகள் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா நூவோஸ்போர்ட்...
நூவோஸ்போர்ட் எஸ்யூவி, மஹிந்திரா நிறுவனம் வழங்கும் ஸ்டைலான தயாரிப்புகளில் ஒன்றாகும்.
இது கடந்த ஏப்ரல் மாடம் இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

தள்ளுபடிகள்;
மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, தற்போது 57,000 ரூபாய் வரையிலான சலுகைகள் கிடைக்கிறது.
இந்த சலுகைகள் அனைத்தும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

தள்ளுபடிகளின் முறைகள்;
மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி மீது மஹிந்திரா நிறுவனம் வழங்கும் இந்த தள்ளுபடிகள், வெல்கம் போனஸ், எக்ஸ்டெண்டட் வாரண்டி எனப்படும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, ரோட்சைட் அசிஸ்டெண்ஸ் ஸ்கீம்ஸ் எனப்படும் சாலையோர உதவிகளுக்கான ஸ்கீம்கள், ஆக்ஸிடெண்ட் இன்ஷூரன்ஸ் பெனிஃபிட் எனப்படும் விபத்து காப்பீடு ஆதாயங்கள், குறைந்த வட்டியிலான பைனான்ஸ் தேர்வுகள் மற்றும் கூடுதல் ஆக்சஸரீஸ் உள்ளிட்ட முறைகளில் கிடைக்கிறது.

டீலர்ஷிப்கள் வழங்கும் தள்ளுபடிகள்;
மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி மீது சில மஹிந்திரா டீலர்ஷிப்கள் 15,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரையிலான கேஷ் டிஸ்கவுன்ட் எனப்படும் ரொக்க ஆதாயங்களை வழங்குகின்றனர்.
மேலும், மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் மீது 90% வரையிலான பைனான்ஸ் பெறுவதற்கும் பல்வேறு டீலர்ஷிப்கள் உதவுகின்றனர்.

மாற்று;
மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, குவான்ட்டோ மாடலுக்கு மாற்றாக அமைந்துள்ளத்து.
மேலும், மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, மஹிந்திரா நிறுவனம் வழங்கும் 2 சப் 4-மீட்டர் எஸ்யூவிகளில் ஒன்றாக உள்ளது. டியூவி3OO மற்றொரு சப் 4-மீட்டர் எஸ்யூவி ஆகும்.

இஞ்ஜின்;
மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவிக்கு 3 சிலிண்டர்கள் உடைய 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இஞ்ஜின், 100 பிஹெச்பியையும், 240 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;
மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் அல்லது 5-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியார்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மைலேஜ்;
மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, ஒரு லிட்டருக்கு 17.45 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

விலை;
மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் பேஸ் வேரியன்ட்டின் விலை 7.35 லட்சம் ரூபாய் முதல் துவங்குகிறது.
மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின், ஏஎம்டி உடைய என்8 (N8) என்ற டாப் என்ட் வேரியன்ட்டின் விலை 9.76 லட்சம் ரூபாய் என்ற விலையில் இருந்து துவங்குகிறது.
குறிப்பு ; இந்த அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் தானே விலைகள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;
மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது
நூவோஸ்போர்ட் தொடர்புடைய செய்திகள்
குவான்ட்டோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி - கூடுதல் படங்கள்
மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி - கூடுதல் படங்கள்


Click it and Unblock the Notifications








