மஹிந்திரா டியூவி300 விலைகள் 13,000 ரூபாய் வரை உயர்த்தபட்டுள்ளது
மஹிந்திரா டியூவி300 விலைகளை 13,000 ரூபாய் உயர்த்தி புதிய விலைகளை, மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் உயர்த்திய விலைகளை குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா டியூவி300-யின் அறிமுகம்;
மஹிந்திரா நிறுவனம், தங்களின் புதிய டியூவி300 சப்-காம்பேக்ட் எஸ்யூவி-யை, செப்டம்பர் 2015-ல் அறிமுகம் செய்தது.

ஏஎம்டி கியர்பாக்ஸுடன் அறிமுகம்;
மஹிந்திரா டியூவி300-யின் பேஸ் (அடிப்படை) வேரியண்ட் 6.98 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும், உயர்-ரக (டாப்-எண்ட்) வேரியண்ட் 9.20 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும் அறிமுகம் செய்யபட்டது.
இந்தியாவிலேயே, அறிமுகத்தின் போதே ஏஎம்டி கியர்பாக்ஸுடன் அறிமுகம் செய்யபட்ட வாகனம், மஹிந்திரா டியூவி300 தான் என்பது குறிப்பிடதக்கது.

சராசரியாக 4,000 கார்கள் விற்பனை;
இப்போது பெரும் பரபரப்பில் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்-டில் நுழைந்த இந்திய நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா-வின் திட்டத்திற்கு முழு பலன்கள் கிடைத்துள்ளது.
கடந்து 4 மாதங்களாக, ஒரு மாதத்திற்கு சராசரியாக 4,000 எஸ்யூவி-கள் என்ற விகிதத்தில் மஹிந்திரா டியூவி300 விற்பனையாகியுள்ளது.

வகைபடுத்தல்;
மஹிந்திரா டியூவி300, குவாண்டோ காருக்கு மேலாக வகைபடுத்தபட்டுள்ளது.

நேரடி போட்டி;
மஹிந்திரா டியூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காருக்கு நேரடி போட்டியாக விளங்குகிறது.

கிடைக்கும் வேரியண்ட்கள்;
மஹிந்திரா டியூவி300, டி4, டி6 மற்றும் டி8 ஆகிய மூன்று ட்ரிம்களில், 7 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

நிறங்களின் தேர்வுகள்;
மஹிந்திரா டியூவி300, கிலேஷியர் வைட், வெர்வ் புளூ, டைனமைட் ரெட், மெஜெஸ்டிக் சில்வர், போல்ட் பிளாக் மற்றும் மோல்டன் ஆரன்ஜ் அகிய 6 வண்ணங்களின் தேர்வுகளில் கிடைக்கிறது.

டிசைன்;
இந்த மஹிந்திரா டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவி, ‘பேட்டல் டேங்க்' (போர் டேங்க்) டிசைனின் பிரபாவம் கொண்டுள்ளது.
இது பினின்ஃபரினா டிசைன் ஹவுஸ் ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

சென்னையில் உற்பத்தி;
மஹிந்திரா டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவி, சென்னையில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யபடுகிறது.
ஆரம்ப கட்டத்தில், 4,000 கார்கள் தயாரிக்க திட்டமிட்டிருந்தனர். பெருகி வரும் வரவேற்பை சமாளிக்க, 5,500 முதல் 6,000 கார்கள் என்ற அளவில் உற்பத்தியை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

அமோக வரவேற்பு;
மஹிந்திரா டியூவி300 அமோக வரவேற்பை பெற்றது. முதல் 2 மாதங்களிலேயே 15,500 புக்கிங்களை பெற்றது.

விலை உயர்வுக்கு கூறப்படும் காரணம்;
உள்ளீடுகள் விலை உயர்வு மற்றும் நிர்வாக செலவுகளிலன் அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், விலை உயர்வு அறிவிக்கபட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

விலை உயர்வு அமலாகும் தேதி;
மஹிந்திரா டியூவி300 மீது சுமார் 13,000 ரூபாய் விலை உயர்வு அறிவிக்கபட்டுள்ளது.
அனைத்து வேரியண்ட்கள் மீதும் பரவலாக செய்யபட்ட இந்த விலை ஏற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

வேரியண்ட் ரீதியாக, விலை விவரங்கள் -1 ;
டி4 - பழைய விலை - 6.98 லட்சம் ரூபாய்
டி4 - புதிய விலை - 7.11 லட்சம் ரூபாய்
டி4 பிளஸ் - பழைய விலை - 7.33 லட்சம் ரூபாய்
டி4 பிளஸ் - புதிய விலை - 7.46 லட்சம் ரூபாய்
டி6 - பழைய விலை - 7.63 லட்சம் ரூபாய்
டி6 - புதிய விலை - 7.76 லட்சம் ரூபாய்
இந்த விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

வேரியண்ட் ரீதியாக, விலை விவரங்கள் -2 ;
வேரியண்ட் ரீதியாக, உயர்த்தபட்டுள்ள மஹிந்திரா டியூவி300-ன் முழுமையான விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
டி6 பிளஸ் - பழைய விலை - 7.88 லட்சம் ரூபாய்
டி6 பிளஸ் - புதிய விலை - 8.01 லட்சம் ரூபாய்
டி8 - பழைய விலை - 8.48 லட்சம் ரூபாய்
டி8 - புதிய விலை - 8.61 லட்சம் ரூபாய்
டி6 பிளஸ் ஏஎம்டி - பழைய விலை - 9.20 லட்சம் ரூபாய்
டி6 பிளஸ் ஏஎம்டி - புதிய விலை - 9.33 லட்சம் ரூபாய்
டி8 ஏஎம்டி - பழைய விலை - 9.20 லட்சம் ரூபாய்
டி8 ஏஎம்டி - புதிய விலை - 9.33 லட்சம் ரூபாய்
இந்த விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

பிற நிறுவனங்களின் தயாரிப்புகளின் விலையேற்றங்கள்;
மஹிந்திரா நிறுவனம் மட்டும் இத்தகைய விலையேற்றங்களை செய்யவில்லை. ஹூண்டாய் கார் நிறுவன தயாரிப்புகள் 30,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் தங்கள் சொகுசு கார்களின் விலைகளை 3 அல்லது 2 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.
இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களின் விலைகளை 20,000 ரூபாய் வரை உயர்த்த உள்ளது. டொயோட்டா கார்களின் விலைகளும் 3 சதவிகிதம் வரை உயர்த்தபட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;
மஹிந்திரா தொடர்பான செய்திகள்
மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவிக்கு முன்பதிவு அமோகம்... காரணங்கள் என்ன
மஹிந்திரா கேயூவி100: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








