மஹிந்திரா டியூவி300, புதிய எம்ஹாக்100 இஞ்ஜின் மற்றும் ஏஎம்டியுடன் அறிமுகம்
மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், தங்களின் மஹிந்திரா டியூவி300 காரை, புதிய எம்ஹாக்100 இஞ்ஜின் மற்றும் ஏஎம்டியுடன் அறிமுகம் செய்துள்ளது.
மஹிந்திரா டியூவி300 காரின் இந்த புதிய மேம்பாடுகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய மேம்பாடுகள்...
இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம், புதிய மேம்பாடுகளின் ஒரு பகுதியாக, தங்களின் டியூவி300 காரை, புதிய எம்ஹாக்100 இஞ்ஜின் மற்றும் ஏஎம்டி தேர்வுகளுடன் அறிமுகம் செய்துள்ளது.
ஆட்டோஷிஃப்ட் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட் மேனுடவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு முறையில் வழங்கபடுக்கிறது.

இஞ்ஜின்;
மஹிந்திரா டியூவி300 மாடலின் மேம்படுத்தபட்ட இஞ்ஜின், 100 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 240 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
மஹிந்திரா டியூவி300 மாடலின் மேம்படுத்தபட்ட இஞ்ஜின், தேர்வு முறையிலான மேனுவல் மற்றும் புதிய ஆட்டோஷிஃப்ட் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

டாப் என்ட் வேரியன்ட்...
புதிய எம்ஹாக்100 இஞ்ஜின் மற்றும் ஆட்டோஷிஃப்ட் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் வசதியானது, டியூவி300 காரின் டாப் என்ட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

பலன்கள்;
புதிய எம்ஹாக்100 இஞ்ஜின் முலம் செயல்திறன் கூட்டபட்ட மஹிந்திரா டியூவி300 மாடலின் இன்ஜின் வாடிக்கையாளர்களுக்கு டிரைவிங் அனுபவத்தை வழங்கும்.
புதிய எம்ஹாக்100 இஞ்ஜின் பொருத்தப்பட்ட மஹிந்திரா டியூவி300 கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, கொடுத்த பணத்திற்கு தங்கள் கார் முலம் கூடுதல் பலன்களை பெற முடியும்.
ஏஎம்டி டிரான்ஸ்மிஷனின் சேர்க்கை, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சொகுசுகளை வழங்குகிறது.

அபார வரவேற்பு;
மஹிந்திரா நிறுவனம் வழங்கும் டியூவி300 மாடலில், இந்தியாவில் மட்டும் இதுவரை 25,000 கார்கள் விற்கபட்டுள்ளது.

எதிர்பார்ப்பு;
மஹிந்திரா டியூவி300 மாடலில் கூடுதல் திறன்கொண்ட புதிய எம்ஹாக்100 இஞ்ஜின் மற்றும் ஏஎம்டியின் இணைப்பு, இதன் விற்பனையை கூட்டும என எதிர்பார்க்கபடுகிறது.

வருங்கால திட்டம்;
மஹிந்திரா நிறுவனம், வருங்காலங்களில் புதிய மற்றும் சுவாரஸ்யமான தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது.

விற்பனை;
மஹிந்திரா டியூவி300 மாடலின் 2 வேரியன்ட்களும், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மஹிந்திரா ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

விலை;
1.5 லிட்டர் இன்ஜின் கொண்ட மஹிந்திரா டியூவி300 மாடல், 8.87 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் விற்பனை செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் கூடுதல் திறன்மிக்க மாடல் விரைவில் அறிமுகம்
மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் 12 முக்கிய சிறப்பம்சங்கள்!!
டியூவி300 தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








