70-வது சுதந்திர தின ஸ்பெஷல் - மஹிந்திரா டியூவி300 புதிய வண்ணத்தில் அறிமுகம்
மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தங்களின் மஹிந்திரா டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவி புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்தனர்.
நமது இந்திய நாடு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி 1947-ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. இதன் 70-வது ஆண்டு விழா நாடு முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த வகையில் கொண்டாடும் நேரத்தில், மஹிந்திரா நிறுவனம், மஹிந்திரா டியூவி300 மாடலை புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்தது.
புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்யபட்ட மஹிந்திரா டியூவி300 குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய வண்ணம்;
மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மஹிந்திரா டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவி, பிரான்ஸ் கிரீன் பெயின்ட் ஸ்கீம் எனப்படும் புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.
இந்த நிறத்திலான மஹிந்திரா டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவி, ஸ்பெஷல் எடிஷன் மாடலாகவே அறிமுகம் செய்யப்படுகிறது.

மாற்றங்கள்;
நிற மாற்றத்தை தவிர, இந்த மஹிந்திரா டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவியில் வேறு எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் செய்யப்படவில்லை.

இஞ்ஜின்;
மஹிந்திரா டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவிக்கு அதே 1.5 லிட்டர் எம்ஹாக் 80 டீசல் இஞ்ஜின் தான் பொருத்தபட்டுள்ளது. இந்த இஞ்ஜின் 80 பிஹெச்பியையும், 230 டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;
மஹிந்திரா டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவியின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

அமோக வரவேற்பு;
மஹிந்திரா நிறுவனம் வழங்கும் தயாரிப்புகளுக்கும், இந்திய வாகன சந்தைகளில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. மஹிந்திரா டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவியும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக உள்ளது.
மஹிந்திரா நிறுவனம், பல்வேறு புதிய மற்றும் ஈர்க்கும் வகையிலான கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

விலை;
மஹிந்திரா நிறுவனம், இந்த பிரான்ஸ் கிரீன் பெயின்ட் ஸ்கீம் நிறத்திலான மாடலின் விலை விவரங்களை வெளியிடவில்லை. எனினும், இந்த புதிய வண்ணத்திலான மஹிந்திரா டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவி கூடுதலாக எந்த கட்டணமும் விதிக்கப்படாது என டீலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;
மஹிந்திரா டியூவி300, புதிய எம்ஹாக்100 இஞ்ஜின் மற்றும் ஏஎம்டியுடன் அறிமுகம்
மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவிக்கு முன்பதிவு அமோகம்... காரணங்கள் என்ன?
மஹிந்திரா டியூவி300 தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








