உருமறைக்கப்பட்டு சென்னையில் உலா வந்த மஹிந்திரா டியூவி 500 கார்

By Meena

ஹாட்டான சென்னை நகருக்குள்ளே முழுக்க முழுக்க காகிதம் (ரேப்பர்) ஒட்டி மறைக்கப்பட்ட ஒரு மர்ம கார் உலா வந்தால் தெறித்து ஓடி விடுவோம் இல்லையா? எங்கே பயங்கரவாதிகள்தான் ஊருக்குள் வந்து விட்டார்களோ என்று மான் கராத்தே ஸ்டைலில் மாயமாகிவிடுவோம்.

சமீபத்தில் சென்னைக்குள் அப்படி ஒரு கார் வந்தது. ஆனால், அதைப் பார்த்து யாரும் பயந்து ஓடவில்லை. மாறாக, ஆசையோடு அதை மக்கள் பார்த்து ரசித்தார்கள் என்றால் நம்புவீர்களா? ஆமாங்க... மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தப் போகும் புதிய எம்பிவி மாடல் காரான டியூவி 500 கார்தான் அப்படி ரவுண்ட் அடித்தது. அந்த மாடலின் டிசைன், கலர், ஸ்ட்ரக்சர் ஆகியவை வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முழுக்க முழுக்க ரேப்பர் சுற்றப்பட்டு அந்த காரை சோதனை ஓட்டம் மேற்கொண்டது அந்த நிறுவனம்.

அது ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் கேமராவில் வசமாக சிக்கியிருக்கிறது. அதை வைத்தே அந்த மாடலின் வடிவமைப்பு, சிறப்பம்சங்களை ஓரளவு யூகிக்க முடிகிறது.

இன்னோவாவுக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் மஹிந்திரா!

டியூவி 500 மாடலின் பேனட் வடிவமைப்பு கிட்டத்தட்ட எக்ஸ்யூவி 500 எஸ்யூவி காரைப் போலவே உள்ளது. வளைவுகள், பக்கவாட்டு டிசைன்கள் ஆகியவை அந்த இரு மாடல்களிலும் ஒத்துப் போகின்றன.

இன்னோவாவுக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் மஹிந்திரா!

முகப்புக் கண்ணாடியை (விண்ட் ஷீல்டு) எடுத்துக் கொண்டால், மஹிந்திரா ஸைலோ மாடலின் பிரதிபலிப்பாக இருக்கிறது. எக்ஸ்யூவி 500 மாடலைப் போலவே மூன்று வரிசை இருக்கைகள் இந்த மாடலிலும் இடம்பெற்றிருப்பது பார்த்தவுடன் கண்ணுக்குப் புலப்படுகிறது.

இன்னோவாவுக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் மஹிந்திரா!

டியூவி 500 மாடல் காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்த வாய்ப்புள்ளது. அந்த வகை எஞ்சின்கள் 140 பிஎச்பி மற்றும் 330 என்எம் டார்க் வெளியேற்றும் திறன் கொண்டவை. 6 கியர்களும். ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷனும் இந்த மாடலில் கொடுக்கப்படலாம்.

இன்னோவாவுக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் மஹிந்திரா!

இல்லையெனில், மேலும், டெல்லியில் விதிக்கப்பட்ட தடையின் காரணமாக, மஹிந்திரா அறிமுகம் செய்த புதிய 1.99 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடலிலும் வரும் வாய்ப்புள்ளது. இந்த எஞ்சின் 140 பிஎச்பி பவரையும் மற்றும் 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இன்னோவாவுக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் மஹிந்திரா!

அடுத்த ஆண்டு இந்த புதிய எம்பிவி கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட சற்று குறைவான விலையில் நிலைநிறுத்தப்படும். இருப்பினும், இன்னோவா மோகத்தை இந்த கார் குறைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Source

More from DriveSpark

Article Published On: Monday, July 11, 2016, 9:22 [IST]
English summary
Mahindra TUV500 MPV Spotted Camouflaged In Chennai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+