மாருதி ஆல்ட்டோ காரின் டீசல் மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

By Ravichandran

மாருதி ஆல்ட்டோ டீசல் மாடல், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட உள்ளது.

விரைவில் காட்சிபடுத்தபட உள்ள மாருதி ஆல்ட்டோ டீசல் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்வோம்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டீசல் வேரியண்ட்;

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டீசல் வேரியண்ட்;

டீசல் இஞ்ஜின் கொண்ட புதிய மாருதி ஆல்டோ, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபடுகிறது.

இந்த 2016-ஆம் ஆண்டிற்கு என, இந்த ஹேட்ச்பேக்கில் சில சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யபட உள்ளது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி;

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், மாருதி சுஸுகி நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் ஏராளமான தயாரிப்புகளை காட்சிபடுத்த முடிவு செய்துள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய மாருதி சுஸுகி ஆல்டோ, 793சிசி, ட்வின் - சிலிண்டர்கள் உடைய டிடிஐஎஸ் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி ஆல்ட்டோ டீசல் வேரியண்ட்டின் இஞ்ஜின், 48 பிஹெச்பி-யையும், 69 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

புதிய மாருதி சுஸுகி ஆல்டோ-வின் டீசல் வேரியண்ட், ஒரு லிட்டருக்கு 27.62 கிலோமீட்டர் என்ற வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

ஏஎம்டி தேர்வுகளும் அறிமுகம்;

ஏஎம்டி தேர்வுகளும் அறிமுகம்;

மாருதி சுஸுகி நிறுவனம், தங்களின் ஆல்ட்டோ கார்களை ஏஎம்டி அல்லது ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன் என்று அழைக்கபடும் தேர்வுகளுடன் வழங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் ஏஎம்டி மாடல்களை, விருப்பமாக ஏற்று கொள்வதாக மாருதி சுஸுகி உணர்ந்து கொண்டு வருகிறது. முன்னதாக, செலெரியோ மற்றும் பிற மாடல்கள் இந்த ஏஎம்டி மாடல்களை ஏற்று கொண்டதால் மிகுந்த அளவில் லாபம் அடைந்துள்ளது.

இதன் அடிப்படையில் மாருதி ஆல்டோவும், அதன் விற்பனையை உயர்த்தி கொள்ளும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஏர்பேக்-களின் அறிமுகம்;

ஏர்பேக்-களின் அறிமுகம்;

சமீபத்தில், மாருதி சுஸுகி நிறுவனம் டிரைவர்-சைட் ஏர்பேக்-களை, அனைத்து வேரியண்ட்களிலும், தேர்வு முறையில் அறிமுகம் செய்திருந்தது.

முன்னதாக, ஆல்ட்டோ 800 மற்றும் ஆல்ட்டோ கே10 பேஸ் வேரியண்ட்களுக்கு, ஏர்பேக்-கள் தேர்வு முறையில் கூட வழங்கபட வில்லை. கொஞ்ச காலமாக, தங்கள் நிறுவனம் விற்கும் அனைத்து மாடல்களிலும், தேர்வு முறையிலாவது பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என மாருதி சுஸுகி நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 21, 2016, 8:30 [IST]
English summary
Maruti Alto Diesel Variant is to be showcased at the 2016 Delhi Auto Expo. The Diesel Engine based Maruti Alto hatchback would be receiving few mild cosmetic updates for 2016. Maruti Alto Diesel Variant will have a 793cc, twin-cylinder DDiS diesel engine, which produces 48bhp and 9Nm of peak torque.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+