மாருதி நிறுவனத்தின் எஸ் கிராஸ் மாடல் கார்ளுக்கு ரீகால் அழைப்பு

By Ravichandran

மாருதி நிறுவனம் வழங்கும் மாருதி எஸ் கிராஸ் மாடல்களுக்கு ரீகால் அழைப்பு விடுக்கபட்டுள்ளது. எஸ் கிராஸ் மாடடிலின் 2 வேரியண்ட்களும் ரீகால் செய்யபடுகிறது.

சில தவிர்க்கமுடியாத கோளாறுகளால் பிரேக் கேளிப்பரகளில் கசிவு ஏற்படுகிறதா என்பதை பரிசோதிக்கவே இந்த ரீகால் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.

ஏப்ரல் 20, 2015 முதல் ஃபிப்ரவரி 12, 2016-ஆம் தேதிக்கு இடையில் உற்பத்தி செய்யபட்ட சுமார் 20,427 மாருதி எஸ் கிராஸ் மாடல்கள் மேற்குறிப்பிட்ட கோளாறினால் பாதிக்கபட்டுள்ளதாக சந்தேகிக்கபடுகிறது. மாருதி எஸ் கிராஸ் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் கார் பாதிக்கபட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள, www.nexaexperience.com என்ற இணையதளத்திற்கு சென்று பரிசோதித்து கொள்ளலாம்.

மாருதி எஸ் கிராஸ் உரிமையாளர்கள், www.nexaexperience.com இணையதளத்தில் சென்று MA3 என்பதை பின் தொடர்ந்து வரும் 14 இலக்க (டிகிட்) ஆல்ஃபா-நியுமெரிக் கோட் (MA3 followed by 14 digit alpha-numeric number) கொண்ட சேஸி நம்பரை நிரப்ப வேண்டும். இந்த சேஸி நம்பர், வெளிகிள் ஐடி பிளேட் மற்றும் வாகனத்தின் இன்வாய்ஸ் மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன் ஆவணங்களிலும் இருக்கும்.

maruti-announced-recall-for-20400-plus-s-cross-model

மாருதி எஸ் கிராஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ஹோண்டா பிஆர்வி மற்றும் ரெனோ டஸ்ட்டர் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது. மாருதி எஸ் கிராஸ் மாடலின் 1.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட அடிப்படை வேரியண்ட் 8.03 லட்சம் ரூபாய் என்ற விலையிலும், 1.6 லிட்டர் கொள்ளளவு கொண்ட டாப் எண்ட் வேரியண்ட் 12.03 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும் விற்கபடுகிறது.

Most Read Articles
English summary
Maruti has issued recall for 20,427 units of the S-Cross in India. This recall is to check the suspected fault resulting seepage in the brake caliper. S-cross manufactured between April 20, 2015 and February 12, 2016 are feared to affected by this issue. Maruti requested S-cross owners to visit NEXA website www.nexaexperience.com to check, if their car is impacted by this issue...
Story first published: Friday, May 20, 2016, 11:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X