மாருதி டிசையர் காரின் ஆட்டோ கியர்ஷிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்தது
மாருதி டிசையர் காரின் ஆட்டோ கியர் ஷிஃப்ட்[AGS] மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
க்ளட்ச் பெடலை இயக்கும் தொல்லை இல்லாத இந்த புதிய மாடல் நகர்ப்புற வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். மேலும், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றான மாருதி டிசையரின் விற்பனையை இந்த புதிய மாடல் இன்னும் ஒருபடி மேலே எடுத்துச் செல்லும் என நம்பலாம். இந்த புதிய மாடலின் விலை மற்றும் இதர முக்கிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டீசலில் மட்டும்...
மாருதி டிசையரின் டீசல் எஞ்சின் மாடலில் மட்டுமே இந்த புதிய ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டாப் வேரியண்ட்
மாருதி டிசையர் டீசல் மாடலின் ZDI டாப் வேரியண்ட்டில் மட்டுமே இந்த ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பேஸ் மற்றும் நடுத்தர வகை வேரியண்ட்டுகளில் ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதியுடன் கிடைக்காது.

எஞ்சின்
மாருதி டிசையர் டீசல் மாடலில் 74 பிஎச்பி பவரை வழங்கவல்ல 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சினுடன், ஆட்டோ கியர் ஷிஃப்ட் தொழில்நுட்பம் கொண்ட ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மைலேஜ்
மாருதி டிசையர் காரின் ஆட்டோ கியர் ஷிஃப்ட் மாடல் லிட்டருக்கு 26.59 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விலை
ரூ.8.39 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மாருதி டிசையர் காரின் டீசல் ஆட்டோ கியர் ஷிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

விலை வித்தியாசம்
மாருதி டிசையர் டீசல் காரின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ZDI வேரியண்ட் ரூ.7.91 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த மாடல் ரூ.48,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.

4வது ஏஎம்டி மாடல்
மாருதி செலிரியோ, மாருதி ஆல்ட்டோ கே10 மற்றும் வேகன் ஆர் கார்கள் பெட்ரோல் மாடலில் மட்டும் ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதியுடன் விற்பனை செய்யப்படும் நிலையில், மாருதியின் முதல ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்ட டீசல் மாடலாக களமிறங்கியிருக்கிறது.

ஆட்டோ கியர் ஷிஃப்ட் செயல்படும் விதம்


Click it and Unblock the Notifications








