மாருதி நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை குஜராத்தில் துவக்கம்

By Ravichandran

மாருதி நிறுவனத்தின் பலேனோ கார்களை தயாரிக்க குஜராத்தில் புதிய உற்பத்தி ஆலை துவங்கபடுகிறது.

மாருதி சுஸுகி பலேனோ சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிமுகம் செய்யபட்டது. அது அறிமுகம் செய்யபட்ட 6 மாதங்களுக்குள், குறிப்பிடும் அளவிற்கு நல்ல அளவில் வாடிக்கையாளர்கள் ஆதரவு கிடைத்துள்ளது. மாருதி பலேனோ ஹேட்ச்பேக் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகிறது.

குஜராத்தில் அமைக்கப்படும் மாருதி நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படும் பலேனோ கார்கள், சர்வதேச சந்தைகளில் எழும் தேவைகளை பூர்த்தி செய்யும். மாருதி சுஸுகி நிறுவனம் குஜராத்தில் அமைக்கும் இந்த உற்பத்தி ஆலையில், 2017-ஆம் ஆண்டு முதல் உற்பத்தி துவங்கும்.

தற்போது உற்பத்தி நடைபெற்று வரும் ஆலைகளில், ஒரு மாதத்திற்கு, 8,000 பலேனோ கார்கள் வரை உற்பத்தி செய்யும் வசதியுள்ளது. இந்தியா அளவிலான பலேனோ கார்களின் தேவையான 6,000 - 8,000 கார்களை தயாரிக்க தற்போதைய உற்பத்தியே போதுமானது.

ஆனால், பலேனோ கார்கள் சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுவதால், இதன் காத்திருப்பு காலம் சில மாதங்கள் என்ற அளவில் அதிகரித்தது. குஜராத்தில் அமைக்கபடும் மாருதி உற்பத்தி ஆலை மூலம் அதிக கார்கள் தயாரிக்கபட்டு, இந்த காத்திருப்பு காலத்தை குறைக்க பெரும் அளவில் உதவிகரமாக இருக்கும்.

வெகு விரைவில், பலேனோ காரின் 1.0 லிட்டர், 3-சிலிண்டர், பூஸ்டர்ஜெட் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யபடும். இது அறிமுகம் செய்யபட்ட உடன், இந்த குஜராத் உற்பத்தி அதிக எதிர்பார்ப்புகள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட வேரியண்ட்டை உற்பத்தி செய்ய துவங்கிவிடும்.

maruti-new-gujarat-car-facility-to-be-used-for-baleno-car-production

தற்போது, விற்பனையில் உள்ள மாருதி பலேனோ ஹேட்ச்பேக், 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 83 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மாருதி பலேனோவின் டீசல் வேரியண்ட், 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 75 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 190 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த 2 வேரியண்ட்களுமே 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் வேரியண்ட் மட்டும் தேர்வு முறையிலான சிவிடி டிரான்ஸ்மிஷன் தேர்வுடனும் வெளியாகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 7, 2016, 11:06 [IST]
English summary
Maruti is establishing a new manufacturing unit in Gujarat. Baleno Hatchbacks are to be produced in this new manufacturing unit in Gujarat. Maruti Baleno has been garnering good response from Customers. As a result of this and due to export to international markets, Waiting period for Baleno was increasing. Gujarat Unit would solve this problem. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+